டாடா மோட்டார்ஸ் தனது பஞ்ச் இவி மாடலின் மேம்படுத்தப்பட்ட பேஸ்லிப்ட் பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மாடல் 45kWh பேட்டரி விருப்பத்துடன், ஒரே சார்ஜில் 593.6 கிமீ வரை ரேஞ்ச் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மின்சார கார் சந்தையில் பிப்ரவரி முக்கிய இடம் பிடித்துள்ளது டாடா மோட்டார்ஸ் தனது பஞ்ச் இவி மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை 20, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகத்திற்கு முன்பே பல முறை சோதனை ஓட்டத்தில் காட்சி அளித்துள்ள இந்த பேஸ்லிப்ட் மாடல், வடிவமைப்பிலும் தொழில்நுட்ப அம்சங்களிலும் சில முக்கியமானவை மாற்றங்களுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
25
ஒரே சார்ஜில் 593.6 கிலோமீட்டர் பயணிக்கலாம்
குறிப்பாக, ஒரே சார்ஜில் 593.6 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்ற தகவல் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. தற்போது உள்ள 25kWh மற்றும் 35kWh பேட்டரி விருப்பங்கள் தொடரலாம். 25kWh பதிப்பு 82 ஹார்ஸ் பவர் மற்றும் 114 Nm டார்க் வழங்குகிறது. 35kWh பேட்டரி 122 ஹார்ஸ் பவர் மற்றும் 190 Nm டார்க் உற்பத்தி செய்கிறது.
35
அசத்தும் பஞ்ச் இவி பேஸ்லிப்ட் வசதிகள்
இப்போதைய ARAI சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் முறையே 265 கிமீ மற்றும் 365 கிமீ ஆகும். ஆனால், சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், பஞ்ச் இவி பேஸ்லிப்டில் டாடா நெக்ஸான் இவி-யில் பயன்படுத்தப்படும் 45kWh பேட்டரி சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது அறிமுகமானால், ரேஞ்ச் உயர வாய்ப்பு உள்ளது. அதனால் நீண்ட தூர பயணங்களுக்கு இது சிறந்த தேர்வாக மாறலாம்.
வெளிப்புற வடிவமைப்பில் முன்புற பம்பர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. Y-வடிவ LED DRL விளக்குகள் தொடர்ந்தாலும், ஏர்-டேம் மற்றும் ஸ்கிட் பிளேட் பகுதிகளில் சிறிய மாற்றங்கள் காணப்படுகின்றன. பின்புறத்தில் முழு அகல LED லைட் பார் வழங்கப்படலாம்.
55
டாடா பஞ்ச் காரின் புதிய மாடல்
புதிய கலர் ஆப்ஷன்களும் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவப்பு டூயல் டோனுடன் பிரவுன் மற்றும் பிரகாசமான மஞ்சள் நிறங்கள் வரலாம். மொத்தத்தில், இந்த மேம்படுத்தப்பட்ட பஞ்ச் இவி இந்திய இவி சந்தையில் போட்டியை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.