2024ல் அலப்பறை கிளப்பப் போகும் டாடாவின் நான்கு புதிய எலெக்ட்ரிக் கார்கள்!

First Published | Jan 4, 2024, 7:01 PM IST

எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கலக்கிவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணியைத் தக்கவைக்க, 2024ஆம் ஆண்டில் நான்கு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

Tata EV

எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கலக்கிவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2024ஆம் ஆண்டில் 4 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

Tata Punch EV

டாடா பஞ்ச் (Tata Punch EV) எலெக்ட்ரிக் கார் இரண்டு வெர்ஷனில் வர வாய்ப்புள்ளது. 350+ கிமீ வரை ரேஞ்ச் இருக்கலாம். எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.12 லட்சம் முதல் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Tap to resize

Tata Harrier EV

டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் இரட்டை மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும். ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இது சிங்கிள் சார்ஜில் 500 கிமீ தூரத்திற்கு மேல் பயணிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.

Tata Curvv SUV

டாடா கர்வ் சுமார் 500 கிமீ+ ரேஞ்ச் கொண்ட ஸ்டைலிஷ் காராக இருகுகம் என எதிர்பார்க்கலாம். இதன் விலை சுமார் ரூ.20 லட்சத்தில் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

Tata Safari EV

டாடா சஃபாரி எலெக்ட்ரிக் கார் இதன் டீசல் வெர்ஷனில் இருந்து பல வித்தியாசங்கள் கொண்டதாக இருக்கும். பேட்டரி பேக் மற்றும் மோட்டார் அளவு ஹாரியர் எலெக்ட்ரிக் காரைப் போலவே இருக்கும். ரேஞ்ச் ஹாரியரைவிட சற்று குறைவாக இருக்கலாம். இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ. 32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

Latest Videos

click me!