Skoda Superb 2024
அண்மையில் BS6.2 அமலாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பிறகு, ஸ்கோடா நிறுவனம் தனது முந்தைய தலைமுறை சூப்பர்ப் செடானை குறைந்த எண்ணிக்கையில் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட 190hp, 2.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் Skoda Superb 2024ம் ஆண்டு வெளியாகவுள்ளது.
ஆனால் Superb இனி இந்தியாவில் (உள்ளூரில்) அசெம்பிள் செய்யப்படாது, ஆனால் CBU(Completely Build Up) ஆக இறக்குமதி செய்யப்படும். லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அடாப்டிவ் சேஸ் கன்ட்ரோல் டெக், ஆக்டிவ் டயர் பிரஷர் கண்காணிப்பு போன்ற புதிய அம்சங்களுடன் ஒன்பது ஏர்பேக்களுடன் இது அறிமுகமாகும். சுமார் 50 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
212 கிமீ மைலேஜ் தரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. குறைந்த விலையில் வந்துள்ள ஸ்கூட்டரை வாங்குங்க..
Skoda Enyaq iV
இந்தியாவில் ஸ்கோடாவின் முதல் முழு-எலக்ட்ரிக் வண்டியாக இருக்கப்போவது தான் Skoda Enyaq iV. மேலும் இது முழு இறக்குமதியாகக் கொண்டு வரப்படும். இந்த ஐந்து இருக்கைகள் கொண்ட கிராஸ்-ஓவர், ஸ்கோடாவின் கோடியாக் எஸ்யூவியை விட சற்று சிறியது தான். ஸ்கோடா இந்தியாவில் டாப்-ஸ்பெக் '80x' பதிப்பை சோதித்து வருகிறது, இது 77kWh பேட்டரியை கொண்டு இயக்கும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களைப் பெறுகிறது. எலக்ட்ரிக் வாகனம் என்றாலும் 6.9 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் சுமார் 55 லட்சம் என்ற விலையில் இது விற்பனையாகலாம்.
Skoda Kodiaq 2024
முற்றிலும் புதிய Skoda Kodiaq 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் மைல்ட்-ஹைப்ரிட் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின்களால் இயக்கப்படவுள்ளது. ஆனால் டீசல்-தானியங்கி மாடல் 4x4 அமைப்பின் Variantஐ மட்டுமே பெறுகிறது. ஸ்கோடா புதிய கோடியாக்கை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இருப்பினும் அது என்ன பவர்டிரெய்ன் உள்ளமைவைப் பெறும் அல்லது அது தற்போதுள்ள கோடியாக்கை காட்டிலும் எப்படி மாறுபடும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இதன் விளையும் சுமார் 50 லட்சம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.