2027க்குள் 2 லட்சம் புதிய சார்ஜிங் பாயிண்டுகளை டாட்டா டாட் இவி நிறுவும். ஏற்கனவே 2 லட்சம் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ள டாட்டா, 2027க்குள் மொத்தம் 4 லட்சம் சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இனி திரும்புற பக்கம் எல்லா டாடா தான்! 4 லட்சம் சார்ஜிங் பாயிண்டுகளை கட்டமைக்கும் டாடா
2027க்குள் 2 லட்சம் புதிய சார்ஜிங் பாயிண்டுகளை டாடா டாட் இவி நிறுவுமென அறிவித்துள்ளது. ஏற்கனவே 2 லட்சம் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ள டாட்டா, 2027க்குள் மொத்தம் 4 லட்சம் சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
25
டாடா சார்ஜிங் பாயிண்டுகள்
டாட்டா குழும நிறுவனங்களுடன் இணைந்து வீட்டு சார்ஜிங் வசதிகளை எளிதாக்கியும், நகரங்களிலும் புறநகர் பகுதிகளிலும் பொது சார்ஜிங் கட்டமைப்புகளை ஏற்படுத்தியும், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. 'திறந்த ஒத்துழைப்பு' என்ற புதிய திட்டத்தின் கீழ், சார்ஜிங் பாயிண்ட் நிர்வாகிகள், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
35
டாடா குழுமம்
இதன் மூலம், முக்கிய நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் கட்டமைப்புகளை மேம்படுத்தி, தடையற்ற பயணத்தை உறுதி செய்ய டாட்டா டாட் இவி முயற்சிக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவில் பொது சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை வெறும் 15 மாதங்களில் இரட்டிப்பாகி 18,000ஐ தாண்டியுள்ளது.
45
மின்சார வாகனம்
200க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள டாட்டா விற்பனையாளர்களிடம் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டு சார்ஜர்கள், 2,500 சமூக சார்ஜர்கள் மற்றும் 750 பொது சார்ஜர்கள் டாட்டா இவி நிறுவியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கையை 4 லட்சமாக உயர்த்த டாட்டா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
55
டாடா EV
30,000 புதிய பொது சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்க, முன்னணி சார்ஜிங் பாயிண்ட் நிர்வாகிகளுடன் டாட்டா டாட் இவி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சார்ஜிங் நிலையங்கள் அனைத்து மின்சார வாகன உற்பத்தியாளர்களையும், பயனர்களையும் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.