சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது Gen 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிம்பிள் அல்ட்ரா மாடல், ஒரே சார்ஜில் 400 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்ட இந்தியாவின் மிக அதிக ரேஞ்ச் கொண்ட ஸ்கூட்டராக வந்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட சிம்பிள் எனர்ஜி நிறுவனம், இந்திய சந்தையில் தனது Gen 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Simple One Gen 2, Simple OneS Gen 2 மற்றும் Simple Ultra என மூன்று புதிய மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் Simple One Gen 2 ஸ்கூட்டரின் அறிமுக விலை ரூ.1,39,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிம்பிள் அல்ட்ரா மாடல், ஒரே சார்ஜில் 400 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்தியாவின் மிக ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
24
அல்ட்ரா ரேஞ்ச்
Simple OneS Gen 2 மாடல், 190 கி.மீ. ஐடிசி ரெஞ்சுடன் ரூ.1,49,999 (பெங்களூரு எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. Simple One Gen 2 இரண்டு பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது. 4.5 kWh பேட்டரி கொண்ட மாடல் 236 கி.மீ. ரேஞ்சுடன் ரூ.1,69,999 விலையிலும், 5 kWh பேட்டரி கொண்ட மாடல் 265 கி.மீ. ரேஞ்சுடன் ரூ.1,77,999 விலையிலும் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர்கள் உடனடியாக வாங்க கிடைக்கும் நிலையில் உள்ளன.
34
ஜென் 2 ஸ்கூட்டர் அம்சங்கள்
Gen 2 மாடல்களில் வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1 லிட்டர் கிளவ் பாக்ஸ், தனியான சார்ஜிங் போர்ட், எளிமையான புதிய டாஷ்போர்டு, டிராக்ஷன் கண்ட்ரோல், நான்கு நிலை ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எடை 8 கிலோ குறைக்கப்பட்டு, சீட் உயரம் 780 மிமீ ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர்கள் 7-இஞ்ச் டச் ஸ்கிரீன், 5G e-SIM, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நெவிகேஷன், Find My Vehicle, TPMS, பார்க் அசிஸ்ட் போன்ற நவீன வசதிகளுடன் வருகிறது. Simple Energy நிறுவனம் 8 ஆண்டு மோட்டார் வாரண்டி வழங்குகிறது. இந்தியாவின் பல நகரங்களில் உள்ள 61க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மற்றும் Amazon, Flipkart போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் இந்த ஸ்கூட்டர்களை வாங்கலாம்.