பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா வெளியிட்ட தகவலின்படி, மதுரோவின் கைது நிறுவனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2026 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பஜாஜ் ஆட்டோ 16.39 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 19 சதவீதம் அதிகம் என்பதால், நிறுவனத்தின் ஏற்றுமதி வளர்ச்சி வலுவாக உள்ளது.
ஒருகாலத்தில், குறிப்பாக 1990கள் வரை, வெனிசுலாவின் ஆட்டோமொபைல் துறை வலுவாக செயல்பட்டது. ஆனால் 2000களில் ஏற்பட்ட பொருளாதார சரிவு, கடும் பணவீக்கம் மற்றும் உதிரிபாகங்கள் பற்றாக்குறை காரணமாக அந்தத் துறை வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்போர்டு போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை மூடின. தற்போது, வெனிசுலா பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து வசதிகள் பலவீனமாக இருப்பதால், தனியார் வாகனங்களுக்கு அங்கு தொடர்ந்து தேவை இருந்து வருகிறது.