பாதுகாப்பு அம்சங்களாக, மேக்னைட்டில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் ஐபிடி போன்றவை வசதிகள் வழங்கப்படுகின்றன. இவை தினசரி நகர ஓட்டத்திலும், நீண்ட பயணங்களிலும் கூடுதல் நம்பிக்கையை தருகின்றன.
இன்ஜின் தேர்வுகளைப் பார்க்கும்போது, இந்த எஸ்யூவி 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என இரண்டு விருப்பங்களில் கிடைக்கிறது. மேலும், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் விருப்பமும் வழங்கப்படுகிறது. இது சுமார் 24 கிமீ வரை மைலேஜ் தரும் என கூறப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் உள்ளன.
உள் அமைப்பில், மேக்னைட் நல்ல கேபின் ஸ்பேஸ், 336 லிட்டர் பூட் திறன் மற்றும் இந்த விலை வரம்பில் கவனம் ஈர்க்கும் வடிவமைப்பை வழங்குகிறது. 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக, கரடுமுரடான சாலைகளிலும் இது எளிதாக இயக்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகள் நகரம், டீலர்ஷிப், ஸ்டாக், நிறம் மற்றும் வேரியண்ட் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.