10 ஆண்டு நிம்மதியா இருக்கலாம்.. இந்த ஸ்கூட்டரை வாங்கினால் போதும்.. எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?

Published : Mar 02, 2026, 01:14 PM IST

சில முன்னணி ஸ்கூட்டர் நிறுவனங்கள் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகின்றன, இது நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியை அளிக்கிறது.

PREV
15
10 ஆண்டு வாரண்டி ஸ்கூட்டர்

ஒரு முறை ஸ்கூட்டரை வாங்கினால் பல ஆண்டுகள் கவலை இல்லாமல் ஓட்ட முடியுமா? அன்றாட பயணத்திற்கு வலுவான மற்றும் நம்பகமான ஸ்கூட்டரைத் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி இருக்கிறது. சந்தையில் சில முன்னணி நிறுவனங்கள் 10 ஆண்டுகள் வரை உத்தரவாதம் (வாரண்டி) வசதியுடன் ஸ்கூட்டர்களை வழங்குகின்றன. ஸ்டாண்டர்ட் வாரண்டியுடன் சேர்த்து எக்ஸ்டெண்டெட் வாரண்டி தேர்வு செய்தால் நீண்டகால பாதுகாப்பு கிடைக்கும்.

25
ஆக்டிவா ஸ்கூட்டர்

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 110 மாடல் 3 ஆண்டுகள் அல்லது 36,000 கிமீ ஸ்டாண்டர்ட் வாரண்டியுடன் வருகிறது. இதற்கு மேலாக 7 ஆண்டுகள் கூடுதல் வாரண்டி பெறும் விருப்பமும் உள்ளது. அதாவது மொத்தம் 10 ஆண்டுகள் வரை பாதுகாப்பு கிடைக்கலாம். தினசரி பயணிகளுக்கு இது பெரிய நிம்மதியை தருகிறது.

35
சுசுகிபர்க்மென் ஸ்ட்ரீட்

சுசுகி நிறுவனத்தின் பர்க்மென் ஸ்ட்ரீட் மற்றும் அக்சஸ் 125 மாடல்கள் 2 ஆண்டுகள் அல்லது 24,000 கிமீ ஸ்டாண்டர்ட் வாரண்டியுடன் வருகின்றன. குறைந்த கட்டணத்தில் 7 ஆண்டு அல்லது 10 ஆண்டு எக்ஸ்டெண்டெட் வாரண்டி தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. நீண்டகாலமாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

45
டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூபிடர் 110 மாடல் 2 ஆண்டுகள் ஸ்டாண்டர்ட் வாரண்டியுடன் கிடைக்கிறது. 110cc மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களுக்கு 5 ஆண்டுகள் வரை விரிவாக்கப்பட்ட வாரண்டி திட்டமும் உள்ளது. நம்பகத்தன்மை மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவை இதன் பலமாக பார்க்கப்படுகின்றன.

55
டெஸ்டினி 110 ஸ்கூட்டர்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெஸ்டினி 110 ஸ்கூட்டர் 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ ஸ்டாண்டர்ட் வாரண்டியுடன் வருகிறது. இதேபோல் அதன் பிற ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் மாடல்களும் நீண்டகால உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. நீண்டகால பாதுகாப்பு, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நம்பகமான சேவை வலையமைப்பு ஆகியவை இந்த மாடல்களை அதிகம் கவனிக்கத்தக்கதாக மாற்றுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories