இந்தியாவில் கார்களுக்கு மைலேஜ், ரேஞ்ச் மட்டுமின்றி பாதுகாப்புக்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்த டாப் 5 கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் கார் வாங்கும் போது பாதுகாப்பு, மைலேஜ் மற்றும் அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பாரத் NCAP சோதனைகள் மூலம் கார்களுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படுகிறது. இந்த ரேட்டிங்கை பெற்ற கார்கள் சிறந்த பாதுகாப்பை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், பாரத் NCAP மூலம் மதிப்பிடப்பட்ட முதல் 5 பாதுகாப்பான கார்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
26
மஹிந்திரா BE 6
மஹிந்திரா BE 6 மாடல் கார் பெரியவர்களுக்கு 31.97/32, குழந்தைகளுக்கு 45/49 மதிப்பெண்களுடன் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இதன் வலுவான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இதை தனித்து காட்டுகின்றன. இந்த எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 79 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 683 கி.மீ தூரம் வரை செல்ல முடியும். இதன் விலை ரூ.18.90 லட்சம் முதல் தொடங்குகிறது.
36
டாடா பன்ச்
டாடா பன்ச், பெரியவர்கள் பாதுகாப்பில் 30.58/32 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 45/49 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதன் நிலையான பாடி ஷெல், இரட்டை ஏர்பேக்குகள் இதை பாதுகாப்பான தேர்வாக்குகிறது. டாடா பன்ச் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று மாடல்களிலும் கிடைக்கிறது. இந்த மாடலின் பேசிக் வேரியண்ட் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
டாடா ஹாரியர் இவி, பெரியவர்கள் பாதுகாப்பில் 32/32 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 49/49 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதன் வலுவான பிளாட்ஃபார்ம், ஏர்பேக்குகள் இதை தனித்துவமாக்குகின்றன. டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் சுமார் 627 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கிறது. இந்த மாடலின் விலை ரூ.21 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
56
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கு 30.47/32, குழந்தைகளுக்கு 45/49 மதிப்பெண்கள் பெற்று, பெரிய குடும்பங்களுக்கு பாதுகாப்பான தேர்வாக விளங்குகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல் வேரியண்ட்டில் 16 கிமீ வரையிலும், ஹைபிரிட் மாடல் 20 கிமீ வரையிலும் ரேஞ்ச் கொடுக்கிறது. இதன் விலை ரூ.19.77 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது.
66
ஸ்கோடா கைலாக்
ஸ்கோடா கைலாக், 30.88/32 மற்றும் 45/49 மதிப்பெண்களுடன் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. ஸ்டாண்டர்டு ஏர்பேக்குகள், ESC உடன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பின் சிறந்த கலவையாக இது உள்ளது. ஸ்கோடா கைலாக் மாடலில் சக்திவாய்ந்த 1.0 லிட்டர், 3-சிலிண்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 19 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது.