
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் இதுவரை இல்லாத முற்றிலும் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில், இத்தாலியின் புகழ்பெற்ற பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான 'இட்டல்ஜெட்' (Italjet) அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் களமிறங்குகிறது.
மோட்டோஹாவுஸ் இந்தியா (Motohaus India) நிறுவனத்துடன் இணைந்து அறிமுகமாகும் இந்த பிராண்டின் அதிரடியான 'டிராப்ஸ்டர்' (Dragster) வரிசை ஸ்கூட்டர்கள், சாதாரண நகர்ப்புற பயன்பாட்டு வாகனங்களிலிருந்து மாறுபட்டு, ஆக்ரோஷமான வடிவமைப்பு மற்றும் அதிநவீன இன்ஜின் செயல்திறனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
வரும் டிச.4 மற்றும் 5 தேதிகளில் கோவாவில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற 'இந்தியா பைக் வீக்' (India Bike Week) திருவிழாவில், இட்டல்ஜெட் நிறுவனத்தின் டிராப்ஸ்டர் 300, டிராப்ஸ்டர் 459 மற்றும் இதன் முதன்மையான ஃபிளாக்ஷிப் மாடலான டிராப்ஸ்டர் 700 ஆகிய 3 சக்திவாய்ந்த ஸ்கூட்டர் மாடல்களும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்த வரிசையின் ஆரம்ப நிலை மாடலான டிராப்ஸ்டர் 300, டிச.4 அன்று அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தோராயமான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5 லட்சம் ஆக நிர்ணயிக்கப்படலாம்.
இன்ஜின் & செயல்திறன் - 278சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்யூடு-கூல்டு இன்ஜின். இது 23.8 ஹெச்பி பவரையும், 26 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் சிவிடி (CVT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளதால் எளிதாக ஓட்ட முடியும்.
எரிபொருள் & மைலேஜ் - 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூல் டேங்க். சர்வதேச தர அளவீடுகளின்படி லிட்டருக்கு தோராயமாக 19.6 கி.மீ மைலேஜ் தரும்.
சிறப்பம்சங்கள் - வெளியில் தெரியும் வகையில் அமைக்கப்பட்ட ட்ரெல்லிஸ் பிரேம் (Trellis frame), ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் இயக்கத்தைத் தனித்தனியாகப் பிரிக்கும் 'இன்டிபென்டன்ட் ஸ்டீயரிங் சிஸ்டம்' (Independent Steering System), பிரெம்போ (Brembo) பிரேக்குகள், ஏபிஎஸ் மற்றும் டிஎஃப்டி டிஸ்ப்ளே.
மோட்டார்சைக்கிள் போன்ற மெக்கானிக்கல் அனுபவத்தை ஸ்கூட்டர் வடிவில் வழங்கும் இந்த மாடலின் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.7 லட்சம் ஆகும்.
இன்ஜின் & செயல்திறன் - 449சிசி, லிக்யூடு-கூல்டு, பேரலல்-டின் இன்ஜின். இது 47.6 ஹெச்பி பவரையும், 41 என்எம் டார்க்கையும் வழங்கும். இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 'ஸ்மார்ட்ஷிப்ட்' (SmartShift) தொழில்நுட்பம் உள்ளதால், விருப்பத்திற்கேற்ப ஆட்டோமேட்டிக் முறையிலோ அல்லது ஹேண்டில்பாரில் உள்ள பேடில் ஷிஃப்டர்களைப் பயன்படுத்தி மேனுவலாகவோ கியர் மாற்றிக்கொள்ளலாம்.
எரிபொருள் & மைலேஜ் - 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூல் டேங்க். தோராயமாக லிட்டருக்கு 24.4 கி.மீ மைலேஜ் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் - மார்சோச்சி (Marzocchi) நிறுவனத்தின் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யுஎஸ்டி (USD) முன் ஃபோர்க்குகள், பிரெம்போ டூயல் டிஸ்க் பிரேக்குகள், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் 15 இன்ச் பைரெல்லி (Pirelli) டயர்கள்.
இட்டல்ஜெட் வரிசையின் உச்சக்கட்ட மாடலான இது, வேகம் மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்தை விரும்பும் பைக் பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை தோராயமாக ரூ.12 லட்சம் ஆகும்.
இன்ஜின் & செயல்திறன் - அசுர பலம் கொண்ட 698சிசி, லிக்யூடு-கூல்டு, பேரலல்-டின் இன்ஜின். இது 70 ஹெச்பி பவரையும், 70 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். உண்மையான சூப்பர் பைக்கின் செயல்திறனை வழங்கும் வகையில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஹைட்ராலிக் கிளட்ச் இதில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் & மைலேஜ் - 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூல் டேங்க். ஓட்டும் முறையைப் பொறுத்து லிட்டருக்கு 20 முதல் 21 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கக்கூடும்.
சிறப்பம்சங்கள் - ட்ரெல்லிஸ் ஸ்டீல் பிரேம் கட்டமைப்பு, பிரெம்போ பிரேக்கிங் சிஸ்டம், டூயல்-சேனல் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் வண்ணமயமான டிஎஃப்டி திரை.
தோற்றத்தில் ஸ்கூட்டராக இருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு சூப்பர் பைக்கின் ஆற்றலோடு களம் காணும் இந்த இட்டல்ஜெட் ஸ்கூட்டர்கள், இந்திய இருசக்கர வாகன ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.