ரூ.6 லட்சத்தில் இவ்வளவு பாதுகாப்பா? கம்மி விலையில் வரிசைகட்டி நிற்கும் பாதுகாப்பான கார்கள்

First Published | Dec 1, 2024, 8:46 AM IST

புதிய கார் வாங்குபவர்களுக்கு காரின் ஸ்டைல், விலை, மைலேஜ் எந்த அளவு முக்கியமோ அதைவிட பாதுகாப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் கம்மி விலையில் அதிக மைலேஜ் தரும் கார்களை ஆராய்வோம்.

Budget Car

இந்தியாவில் புதிய கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், புதிய கார் வாங்குபவர்கள் காரின் ஸ்டைல், மைலேஜ், விலை உள்ளிட்டவற்றில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் மேலானது காரின் பாதுகாப்பு. பாதுகாப்பான கார் என்றதும் அதன் விலை மிகவும் அதிகமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இந்தியாவில் வெறும் 10 லட்சம் ரூபாய்க்கும் கீழ் பலவிதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தரமான கார்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.

Punch

TATA Punch

TATA Punch ஒரு மைக்ரோ எஸ்யூவி கார் ஆகும், இது குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் (NCAP Crash Test) ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. Tata Punch ஆனது ஆறு ஏர்பேக்குகள், ABS, EBD, TPMS, ரிவர்ஸ் பார்க்கிங் கேமராக்கள் மற்றும் சென்சார்களுடன் வழங்கப்படுகிறது. டாடா பஞ்சின் விலை ரூ.6.13 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

Latest Videos


Dzire

Maruti Suzuki Dzire

Global NCAP க்ராஷ் டெஸ்டில் மாருதி சுஸுகி டிசையர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற முதல் மாருதி சுசுகியின் தயாரிப்பு இதுவாகும். டிசையர் ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஈபிடி உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. Maruti Suzuki Dzire காரின் விலை ரூ.6.79 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

XUV 3XO

Mahindra XUV 3XO

குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் மஹிந்திரா XUV 3XO ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. XUV 3XO ஆனது Level-1 ADAS, ஆறு ஏர்பேக்குகள், (Airbags) ABS, EBD, முன் மற்றும் பின் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பல அம்சங்களுடன் வழங்கப்படுகிறது. Mahindra XUV 3XO காரின் விலை ரூ.7.79 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
 

Nexon

Tata Nexon

பாரத் என்சிஏபி மற்றும் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் Tata Nexon ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. Nexon ஆறு ஏர் பேக்குகள், ABS, EBD, TPMS மற்றும் ADAS அம்சங்களுடன் பாதுகாப்புக்காக வழங்கப்படுகிறது. டாடா நெக்ஸான் அடிப்படை மாடலின் விலை ரூ.7.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

Brezza

Maruti Suzuki Brezza

Global NCAP க்ராஷ் டெஸ்டில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா நான்கு நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. Maruti Suzuki Brezza ஆனது ஆறு ஏர்பேக்குகள், ABS, EBD உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் விலை ரூ.8.34 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

click me!