Honda NX500: பைக் ஓட்டுவதில் மாபெரும் புரட்சி! கிளட்ச் இல்லாமலேயே கியர் மாற்றலாம்.. ஹோண்டா NX500 அதிரடி அறிமுகம்!

Published : May 12, 2026, 09:04 PM IST

Honda NX500: ஹோண்டா நிறுவனம் தனது புகழ்பெற்ற NX500 மாடலில், கிளட்ச் பயன்படுத்தாமலேயே கியர்களை மாற்ற உதவும் புரட்சிகரமான ஈ-கிளட்ச் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 471cc இன்ஜின் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் இந்த பைக்.

PREV
15
ஹோண்டா நிறுவனம்

பைக் பிரியர்களுக்காக, குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களை விரும்புபவர்களுக்காக, ஹோண்டா நிறுவனம் தனது புகழ்பெற்ற NX500 மாடலில் புரட்சிகரமான ஈ-கிளட்ச் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்று பார்ப்போம்.

25
'ஈ-கிளட்ச்' ஸ்பெஷல்?

இந்த பைக்கின் மிக முக்கியமான அம்சம் அதன் கிளட்ச் சிஸ்டம் தான். பொதுவாக கியர் மாற்றும்போது கிளட்ச் லிவரை அழுத்த வேண்டும். ஆனால், இந்த புதிய மாடலில் கிளட்ச்சை தொடாமலேயே மிகவும் மென்மையாக கியர்களை மாற்றிக்கொள்ளலாம். எப்படி வேலை செய்கிறது? இதில் உள்ள இரண்டு எலக்ட்ரானிக் ஆக்சுவேட்டர்கள் கியர் மாற்றும்போது கிளட்ச்சை தானாகவே இயக்கும். உங்களுக்கு பழைய முறையில் கிளட்ச் பிடித்து ஓட்ட வேண்டும் எனத் தோன்றினால், அந்த வசதியும் இதில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் பைக்கின் எடை 3 கிலோ அதிகரித்து, தற்போது 199 கிலோவாக உள்ளது. ஹோண்டா ஏற்கனவே தனது CB650R மாடல்களில் இந்த அம்சத்தை வழங்கியுள்ளது

35
இன்ஜின் மற்றும் வேகம்

வேகத்தில் சமரசம் செய்யாத வகையில், இதில் 471cc ட்வின்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 47 குதிரை சக்தியையும் (HP), 43 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக், கரடுமுரடான சாலைகளிலும் சீறிப்பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பிடிப்பதற்காக முன் 19-இன்ச் மற்றும் பின்புறம் 17-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

45
பாதுகாப்பு மற்றும் வசதிகள்

முன்பக்கம் 'அப்-சைடு டவுன்' (USD) ஃபோர்க்குகளும், பின்பக்கம் 'மோனோஷாக்' சஸ்பென்ஷனும் இருப்பதால் பயணம் மிகவும் சொகுசாக இருக்கும். பாதுகாப்பிற்காக இரட்டை சேனல் ABS (Anti-lock Braking System) மற்றும் முன்பக்கம் இரட்டை டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

55
டிஸ்ப்ளே:

ரைடருக்கு தேவையான தகவலுக்காக 5-இன்ச் TFT திரை இந்த பைக்கில் உள்ளது. இதில் டிராக்ஷன் கன்ட்ரோல் அம்சம் இருந்தாலும், ரைடிங் மோட்ஸ் போன்ற ஆடம்பர அம்சங்கள் இல்லை.

யாருக்கு ஏற்றது?

நகர நெரிசலில் அடிக்கடி கிளட்ச் பிடித்து கை வலிப்பவர்களுக்கும், நீண்ட தூரம் சாகசப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இந்த ஈ-கிளட்ச் மாடல் ஒரு வரப்பிரசாதம். ஹோண்டாவின் இந்த 'க்ரேஸி' அப்டேட் தற்போது பைக் ஆர்வலர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories