பட்ஜெட் விலையில் பனோராமிக் சன்ரூஃப் கார்கள்.. டாடா முதல் கியா வரை.. முழு லிஸ்ட் இதோ!

Published : May 12, 2026, 12:27 PM IST

Budget Panoramic Sunroof Cars: இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) கொண்ட கார்களின் முழு பட்டியலை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
பட்ஜெட் விலையில் பனோராமிக் சன்ரூஃப் கார்கள்

இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கார்களின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. கார் நிறுவனங்கள் போட்டி போட்டு தள்ளுபடி வழங்குவதால் நடுத்தர வர்க்கத்தினரும் கார்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். காரில் வாடிக்கையாளர்ள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) தான். காரின் மைலேஜ், இன்ஜின் திறனைத் தாண்டி, வானத்தைப் பார்த்தபடி பயணிக்கும் இந்த அம்சம் ஒரு சொகுசு அடையாளமாகவே மாறிவிட்டது. நமது நாட்டில் மிகக்குறைந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப் வசதியை வழங்கும் கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

25
டாடா நெக்ஸான் (Tata Nexon)

இந்தியாவிலேயே பனோராமிக் சன்ரூஃப் வசதியுடன் கிடைக்கும் மிக மலிவான கார் டாடா நெக்ஸான் தான். டாடா நிறுவனம் நெக்ஸானில் ப்யூர் பிளஸ் பிஎஸ் (Pure+ PS) எனும் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் எக்ஸ்ஷோரும் விலை சுமார் ரூ.9.59 லட்சம் ஆகும். 5-ஸ்டார் பாதுகாப்பு தரவரிசை கொண்ட இந்த காரில், இந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப் கிடைப்பது ஒரு மிகப்பெரிய விஷயம் என்றே சொல்ல வேண்டும்.

35
கியா சிரோஸ் (Kia Syros)

கியா நிறுவனத்தின் சமீபத்திய வரவான சிரோஸ், இடவசதிக்காக (Space) பெயர் பெற்றது. கேபின் பெரியதாக இருப்பதோடு, மேலேயும் பெரிய கண்ணாடி கூரை இருந்தால் அந்த பயணமே தனி சுகம் தான். அதனை இந்த கார் வழங்குகிறது. இதன் விலை ரூ.10.74 லட்சம் ஆகும். இந்த காரின் எச்டிகே+ (HTK+) மாடலில் இருந்தே சன்ரூஃப் வசதி கிடைக்கிறது. இதில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற நவீன வசதிகளும் ஏராளம் உள்ளன.

மஹிந்திரா XUV 3XO (Mahindra XUV 3XO)

மஹிந்திரா XUV 3XOசப்-காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய மாடல் ஆகும். 2025ல் அறிமுகம் செய்யப்பட்ட ரெவ் எக்ஸ் (RevX) சீரிஸ் மூலம் மஹிந்திரா இதில் ஸ்கைரூஃப் (Skyroof) வசதியைக் கொண்டு வந்தது. இந்த மாடலின் விலை சுமார் ரூ.11.17 லட்சம். இதில் வழங்கப்பட்டுள்ள 'ஸ்கைரூஃப்' தனது பிரிவிலேயே மிகப்பெரியது என மஹிந்திரா கூறுகிறது. இந்த மாடலில் லெவல் 2 ADAS வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

45
எம்ஜி அஸ்டர் (MG Astor)

மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் பிரீமியம் அனுபவத்தை விரும்புவோருக்கு அஸ்டர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மாடலின் உட்புற வடிவமைப்பு மற்றும் மெட்டீரியல் தரம் மிகவும் உயர்தரமாக இருக்கும். 'ஷைன்' (Shine) வேரியண்டில் இருந்தே பனோராமிக் சன்ரூஃப் கிடைக்கிறது. தனித்துவமான AI அசிஸ்டண்ட் வசதியும் இதில் ஒரு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இதன் விலை ரூ.11.34 லட்சம்.

டாடா கர்வ் (Tata Curvv)

டிசைனில் ஒரு வித்தியாசத்தை விரும்புபவர்களுக்காகவே டாடா கர்வ் உருவாக்கப்பட்டுள்ளது. கூபே ஸ்டைல் (Coupe Style) டிசைன் கொண்ட இந்த காரில் சன்ரூஃப் வழியாக வெளிச்சம் உள்ளே வரும்போது கார் இன்னும் பிரம்மாண்டமாக தெரியும். 'ப்யூர்+ எஸ்' (Pure+ S) வேரியண்டில் இந்த அம்சம் உள்ளது. இதன் ஸ்போர்ட்டியான தோற்றம் இளைஞர்களை அதிகம் கவர்கிறது. விலை சுமார் ரூ.11.65 லட்சம் ஆகும்.

55
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta)

இந்தியாவின் 'எஸ்யூவி ராஜா' என்று அழைக்கப்படும் கிரெட்டாவில் பனோராமிக் சன்ரூஃப் என்பது பிரிக்க முடியாத ஒன்று. வாடிக்கையாளர்கள் இந்த வசதிக்காகவே கிரெட்டாவை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். 'இஎக்ஸ் ஆப்ஷ்னல்' (EX Optional) வேரியண்டில் இது கிடைக்கிறது. வாய்ஸ் கமாண்ட் மூலம் "Open Sunroof" என்று சொன்னாலே இது தானாகத் திறக்கும் வசதியும் பெற்றுள்ளது. இந்த காரின் விலை ரூ.13.13 லட்சம்.

கியா செல்டோஸ் (Kia Seltos)

ஸ்டைல் மற்றும் டெக்னாலஜியில் அசத்தும் கியா செல்டோஸ், சமீபத்திய அப்டேட்டிற்குப் பிறகு மலிவான விலையில் சன்ரூஃப் வசதியை வழங்கி வருகிறது. எச்டிகே ஆப்ஷ்னல் (HTK Optional). 360-டிகிரி கேமரா மற்றும் டூயல் ஸ்கிரீன் செட்டப் என இந்த கார் ஒரு டெக்னாலஜி பேக்கேஜ் போல் வசதியை கொண்டுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.14.19 லட்சம் ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories