1170 சிசி பவர்ஃபுல் இன்ஜின், 4 ரைடிங் மோடுகள்: 80-களின் கிளாசிக் லுக்குடன் களமிறங்கியது BMW-யின் ஆஃப்-ரோடு பைக்!

Published : Nov 21, 2026, 11:14 AM IST

இந்தியாவில் அறிமுகமானது புதிய BMW R 12 G/S ஆஃப்-ரோடு பைக். 1170 சிசி பாக்சர் இன்ஜின், 107.5 BHP பவர், ABS Pro மற்றும் 4 ரைடிங் மோடுகள் கொண்ட இதன் முழு விவரங்களை பற்றி பார்போம்.

PREV
14
பிஎம்டபிள்யூ ஆர் 12 ஜி/எஸ் இந்தியா அறிமுகம்

பிஎம்டபிள்யூ மோட்டோராட் (BMW Motorrad) நிறுவனம் தனது புதிய 'பிஎம்டபிள்யூ ஆர் 12 ஜி/எஸ்' (BMW R 12 G/S) நியோ-ரெட்ரோ ஆஃப்-ரோடு பைக்கை இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 1,170 சிசி பாக்சர் இன்ஜின், 107.5 BHP பவர், 115 Nm டார்க், ABS Pro மற்றும் 4 ரைடிங் மோடுகள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் இந்த பைக் வெளியாகியுள்ளது.

1980-களில் உலகப் புகழ்பெற்ற பழங்கால 'ஆர் 80 ஜி/எஸ்' (R 80 G/S) எண்டியூரோ பைக்கின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பைக், கரடுமுரடான ஆஃப்-ரோடு பாதைகளிலும் சாதாரண நகரத்துச் சாலைகளிலும் தைரியமாகப் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

24
நவீன டிசைன்

பழைய ஆர் 80 ஜி/எஸ் பைக்கின் கம்பீரமான தோற்றத்துடன் இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப பல புதிய மாற்றங்கள் இதில் செய்யப்பட்டுள்ளன. முன்பக்க எல்.இ.டி முகப்பு விளக்கில் எக்ஸ் (X) வடிவ ஒளி அமைப்பு மற்றும் பகல்நேர விளக்குகள் (DRL) கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்க டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர்களும் எல்.இ.டி விளக்குகளாக அமைந்துள்ளன. திருடர்களிடம் இருந்து வண்டியைப் பாதுகாக்கும் இம்மொபிலைசர் வசதி, வட்ட வடிவ ஒற்றை மீட்டர் கன்சோல் மற்றும் செல்போன் அல்லது இதர சாதனங்களை சார்ஜ் செய்ய 12 வோல்ட் சாக்கெட் வசதியும் இதில் உள்ளன.

ஆஃப்-ரோடு கட்டமைப்பு

கரடுமுரடான மலைப் பாதைகளிலும் பள்ளங்களிலும் எளிதாகச் செல்லும் வகையில் வலுவான ஸ்டீல் ஃபிரேம் கட்டமைப்பில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 21 இன்ச் மற்றும் பின்பக்கத்தில் 18 இன்ச் கிராஸ்-ஸ்போக் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் நிலையாக வரும் 'எண்டியூரோ பேக்கேஜ்' மூலம் ஆஃப்-ரோடு டயர்கள், அகலமான ஃபுட்ரெஸ்ட்கள், இன்ஜின் பாதுகாப்புத் தகடு மற்றும் உயரமான ஹேண்டில்பார் ஆகியவை கிடைக்கின்றன.

சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன்பக்கத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய 45 மிமீ அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் பாராலீவர் சஸ்பென்ஷனும் உள்ளன. பிரேக்கிங் பாதுகாப்பிற்காக முன்பக்கம் இரட்டை 310 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கம் 265 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

34
பாதுகாப்பு & சொகுசு வசதிகள்

வழுக்கும் சாலைகளிலும் வளைவுகளிலும் சறுக்காமல் இருக்க ஏபிஎஸ் புரோ (ABS Pro) மற்றும் டிராக்‌ஷன் கன்ட்ரோல் வசதிகள் இதில் உள்ளன. மழை, சாலை, எண்டியூரோ மற்றும் எண்டியூரோ புரோ என 4 விதமான ரைடிங் மோடுகளை இதில் மாற்றிக்கொள்ளலாம்.

மேலும், கூடுதலாகக் கிடைக்கும் 'கம்ஃபர்ட் பேக்கேஜ்' மூலம் கிளட்ச் பிடிக்காமல் கியர் மாற்றும் வசதி, வளைவுகளுக்கு ஏற்பத் திரும்பும் முகப்பு விளக்குகள், மேடான இடங்களில் வண்டி பின்னால் உருளாமல் தடுக்கும் ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் குளிர்காலத்தில் கைகளுக்கு இதமளிக்கும் ஹீட்டட் கிரிப்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

44
சக்திவாய்ந்த என்ஜின் & வாரண்டி

இந்த பைக்கில் 1,170 சிசி ஏர் மற்றும் ஆயில்-கூல்டு ட்வின்-சிலிண்டர் பாக்சர் (Boxer) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உதவியுடன் 107.5 பிஹெச்பி (BHP) பவரையும் 115 என்எம் (Nm) டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 229 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 15.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சந்தையில் இந்த பைக் ஒரேயொரு 'புரோ' (Pro) வேரியண்டில், வெள்ளை நிற பாடி மற்றும் சிவப்பு நிற சீட் (Light White with Light Red seat) கொண்ட கண்கவர் வடிவமைப்பில் கிடைக்கிறது. இதற்கு 3 ஆண்டுகள் அல்லது வரம்பற்ற கி.மீ வாரண்டி வழங்கப்படுகிறது; இதனை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 25,40,000 ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories