பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் க்விட், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் நவீன அம்சங்களைக் கொண்ட ஒரு பட்ஜெட் காராக இருந்தபோதிலும், அதன் விற்பனை சமீபத்தில் 46% சரிவை சந்தித்துள்ளது. இதன் விலை ரூ.4.30 லட்சம் முதல் தொடங்குகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் தயாரிக்கும் ஹேட்ச்பேக் மாடல்களில் க்விட் இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலை கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் சமீப காலங்களில் இந்த காரின் விற்பனை குறைந்துள்ளது. 2026 பிப்ரவரி மாதத்தில் வெறும் 375 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதே 2025 பிப்ரவரியில் 698 யூனிட்கள் விற்பனையாகியிருந்தது. இதன் மூலம் ஒரே ஆண்டில் க்விட் விற்பனை சுமார் 46% குறைந்துள்ளது என்பது தெரிய வருகிறது.
25
பட்ஜெட் காராக இருந்தாலும் ஸ்டைலான வடிவமைப்பு
விலை குறைந்த காராக இருந்தாலும், ரெனால்ட் க்விட் தோற்றத்தில் தனது SUV ஸ்டைலை வழங்குகிறது. முன்புறத்தில் LED DRL லைட்கள், ஸ்டைலான கிரில் மற்றும் பல வண்ணங்களில் கிடைக்கும் பாடி கலர்கள் இதற்கு ஒரு பிரீமியம் லுக் தருகின்றன. உள்ளமைப்பைப் பார்த்தால் 8-இன்ச் டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வாய்ஸ் கமாண்ட் போன்ற நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
35
பாதுகாப்பு மற்றும் பயனுள்ள வசதிகள்
பாதுகாப்பு அம்சங்களிலும் க்விட் அடிப்படை ஆனால் முக்கியமான வசதிகளை வழங்குகிறது. டூயல் ஏர்பேக்குகள், ABS உடன் EBD, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் சீட் பெல்ட் ரைம்ண்டர் போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. நகரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் சிறிய அளவு மற்றும் எளிதான இயக்கம் இதன் முக்கிய பலமாக கருதப்படுகிறது.
ரெனால்ட் க்விட் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது தினசரி பயணங்களுக்கு போதுமான சக்தியுடன் மென்மையான ஓட்ட அனுபவத்தை வழங்குகிறது. மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இந்த கார் கிடைக்கிறது. மைலேஜ் விஷயத்தில், மேனுவல் மாடல் லிட்டருக்கு சுமார் 21 கி.மீ மற்றும் AMT மாடல் 22 கி.மீ வரை மைலேஜ் தருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
55
விலை மற்றும் போட்டி மாடல்கள்
இந்தியாவில் ரெனால்ட் க்விட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.4.30 லட்சம் முதல் தொடங்கி ரூ.5.99 லட்சம் வரை உள்ளது. இந்த செக்மென்ட்டில் மாருதி சுசுகி ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, டாடா டியாகோ மற்றும் செலிரியோ போன்ற மாடல்களுடன் இது நேரடியாக போட்டியிடுகிறது. குறைந்த விலை, நல்ல மைலேஜ் மற்றும் எளிதான பராமரிப்பு காரணமாக முதல் முறை கார் வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக பார்க்கப்படுகிறது.