கம்மி விலையில் ரேஞ்ச் ரோவர் கார் வாங்க ஆசையா? EMI விவரங்கள் இதோ!

First Published | Jan 14, 2025, 9:36 PM IST

ரேஞ்ச் ரோவர் என்று சொன்னதும் சொகுசு கார்னு தானே தோணும். ஆனா, விலை அதிகம்னு யோசிக்கிறீங்களா? டவுன் பேமெண்ட் எவ்வளவு? EMI எவ்வளவுனு தெரிஞ்சுக்கோங்க.

ரேஞ்ச் ரோவர் EMI

சொகுசு கார் வாங்கணும்னு ஆசைப்பட்டாலும் விலை அதிகம்னு பலருக்கும் கடன் கிடைக்குமானு சந்தேகம் இருக்கும். ரேஞ்ச் ரோவர் பல மாடல்கள் இந்தியாவில் கிடைக்குது. விலை கொஞ்சம் அதிகம்னு தோணுமே தவிர, வாங்கறதுக்கு எந்தத் தடையும் இல்லை. ரேஞ்ச் ரோவர் காரோட விலை ஒரு கோடிக்கு மேல. ரேஞ்ச் ரோவர் எக்ஸ் ஷோரூம் விலை 67.9 லட்சம் ரூபாய்.

ரேஞ்ச் ரோவர் முன்பதிவு

டெல்லியில ரேஞ்ச் ரோவர் 2.0 லிட்டர் டீசல் ரகத்தோட ஆன் ரோடு விலை 78.21 லட்சம் ரூபாய். மற்ற நகரங்களில் விலை மாறுபடலாம். இந்தக் காரை வாங்க 70.40 லட்சம் ரூபாய் கடன் எடுத்துக்கணும். நாலு வருஷக் கடனுக்கு மொத்தம் 82.48 லட்சம் ரூபாய் கட்டணும்.

Tap to resize

ரேஞ்ச் ரோவர்

ஆறு வருஷக் கடனுக்கு 88.86 லட்சம் ரூபாய் கட்டணும். மாதா மாதம் எவ்வளவு EMI கட்டணும்னு இப்பப் பாக்கலாம். ரேஞ்ச் ரோவர் டீசல் ரகத்துக்கு 7.82 லட்சம் ரூபாய் டவுன் பேமெண்ட் கட்டணும். 8% வட்டிக்கு நாலு வருஷக் கடனுக்கு மாத EMI 1.72 லட்சம் ரூபாய்.

ரேஞ்ச் ரோவர் கடன்

ஐந்து வருஷக் கடனுக்கு மாத EMI 1.43 லட்சம் ரூபாய். 8% வட்டிக்கு ஆறு வருஷக் கடனுக்கு மாத EMI 1.24 லட்சம் ரூபாய். ஏழு வருஷக் கடனுக்கு மாத EMI 1.10 லட்சம் ரூபாய்.

ரேஞ்ச் ரோவர் டவுன் பேமெண்ட்

எட்டு வருஷத்துல மொத்தம் 92.15 லட்சம் ரூபாய் கட்டணும். கடன் வாங்கும்போது வங்கியோட விதிமுறைகள், வட்டி விகிதத்தப் பொறுத்து விலை மாறுபடலாம். வங்கியில எல்லா விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டு கடன் வாங்குங்க.

Latest Videos

click me!