அடிக்கடி பெட்ரோல் போடுறீங்களா? நீங்க தினமும் ஏமாறாம இருக்கீங்கனு சொல்ல முடியுமா?

First Published | Dec 2, 2024, 4:48 PM IST

பெரும்பாலானோர் வீடுகளில் இருசக்கர வாகனம் தொடங்கி, ஆட்டோ, கார் என பல வாகனங்கள் உள்ள நிலையில் அதற்கு நிரப்பப்படும் பெட்ரோல், டீசல் நீங்கள் கொடுக்கும் தொகைக்கு முழுமையாக வழங்கப்படுகிறதா என்பது உங்களுக்கு தெரியுமா? இது பற்றி இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

Petrol Scam

பெட்ரோல் நிலையத்தின் ஜம்ப் ட்ரிக் மோசடி: பெட்ரோல் நிரப்பும் முன்பாக சார் 0ஐ சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்று பெட்ரோல் நிரப்பும் நபர் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும் முன் கூறுகிறார். பெட்ரோல் பம்புகளுக்குச் செல்லும் போது நாம் அனைவரும் அதைக் கேள்விப்பட்டிருக்கலாம். 

இருப்பினும், பூஜ்ஜியத்தை வெறுமனே சரிபார்ப்பது, செலுத்தப்பட்ட விலைக்கு சரியான எரிபொருளைப் பெறுவீர்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. கீழே விவரிக்கப்பட்டுள்ள 'ஜம்ப் ட்ரிக்' மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக பல பெட்ரோல் பம்புகள் முன்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

Petrol Scam

ஜம்ப்ட்ரிக் என்றால் என்ன?

ஜம்ப் ட்ரிக் என்பது சில பெட்ரோல் பம்புகளில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் விலையை விட குறைவான எரிபொருளை விநியோகிப்பதன் மூலம் ஏமாற்றும் ஒரு பொதுவான முறையாகும்.

Tap to resize

Petrol Scam

எப்படி இது நடைபெறுகிறது?

எரிபொருள் நிரப்பத் தொடங்கும் போது, ​​எரிபொருள் மீட்டர் 0 இலிருந்து 10, 20 அல்லது அதற்கும் அதிகமாக, சாதாரணமாக படிப்படியாக அதிகரிக்காமல், விரைவாகத் அதிகரிக்கிறது.

Petrol Scam

வேகமாக அதிகரிக்கும் தொகை

பெட்ரோல் பம்புகள் தங்கள் இயந்திரங்களை உயர்த்தப்பட்ட அளவீடுகளைக் காண்பிக்கும் வகையில் சரிசெய்யலாம், இது உண்மையில் விநியோகிக்கப்படுவதை விட அதிக எரிபொருள் பம்ப் செய்யப்படுவது போல் தோன்றும்.

Petrol Scam

விதி என்ன?

சாதாரண நிலையில், மீட்டர் ஜம்ப் ரூ.4-5க்குள் மட்டுமே இருக்க வேண்டும். ரூ.10 அல்லது 20 அல்லது அதற்கும் அதிகமான விலை உயர்ந்தால், அது தவறு நடப்பதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

எரிபொருள் நிரப்பும் போது மீட்டரை எப்போதும் உன்னிப்பாகக் கண்காணிக்கவும். ரீடிங் கிடுகிடுவென உயர்ந்தால், அதைக் கேள்வி கேட்கத் தயங்க வேண்டாம்.

Latest Videos

click me!