பிப்ரவரி 2026-ல் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தை 46% வளர்ச்சி கண்டுள்ளது, இதில் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் போன்ற பாரம்பரிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் இந்த மார்க்கெட்டில் ஓலா எலக்ட்ரிக் முன்னணியில் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. பாரம்பரிய இருசக்கர வாகன நிறுவனங்கள் மின்சார சந்தையில் களமிறங்கியதால் கடுமையாக போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, ஒரு காலத்தில் மார்க்கெட்டில் முன்னிலையில் இருந்த ஓலா நிறுவனம் தற்போது டாப்-5 பட்டியலில்கூட இடம்பெறவில்லை.
25
ஓலா எலக்ட்ரிக்
அரசு தரவுகளின்படி, 2026 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 1,11,680 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 46% வளர்ச்சி என குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக பாரம்பரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாதத்தில் விற்பனையில் பெரும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன.
35
பஜாஜ் ஆட்டோ
இந்த பட்டியலில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 31,600 மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து, கடந்த ஆண்டை விட 67% வளர்ச்சி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் விற்பனை செய்யும் சேடக் மின்சார ஸ்கூட்டர் மூலம் 25,323 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 17% வளர்ச்சி ஆகும்.
மூன்றாவது இடத்தில் ஏதர் எனர்ஜி உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டை விட 72% அதிகமாக விற்பனை செய்து, 20,581 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்துள்ளது. மேலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா மின்சார ஸ்கூட்டர்கள் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர். இந்த நிறுவனம் 12,512 வாகனங்கள் விற்பனை செய்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 364% வளர்ச்சி என்ற சாதனையை பதிவு செய்துள்ளது.
55
இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை
இதேவேளை, கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமும் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் ஆம்பியர் என்ற பிராண்டில் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது. பிப்ரவரி மாதத்தில் 4,725 யூனிட்கள் விற்பனை செய்து, கடந்த ஆண்டை விட 27% வளர்ச்சி கண்டுள்ளது. ஒருகாலத்தில் EV சந்தையில் முன்னணியில் இருந்த ஓலா எலக்ட்ரிக், தற்போது டாப்-5 பட்டியலில்கூட இடம்பெறாதது இந்த துறையில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.