ஜப்பான் நிறுவனமான சுசுகி, இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் e-Access மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 95 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் இந்த EV, 3kWh LFP பேட்டரியுடன் வருகிறது.
ஜப்பான் இருசக்கர வாகன தயாரிப்பாளரான சுசுகி, இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தனது முதல் முயற்சியாக “e-Access” மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலையால் தினசரி பயணம் சிரமமாகும் நிலையில், இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விற்பனை துவங்கிய முதல் மாதத்திலேயே 370 பேர் இந்த மாடலை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
25
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை
2025 மே 23ஆம் தேதி தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை துவங்கிய சுசுகி, 2026 ஜனவரியில் e-Access-I இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. SIAM தரவுகளின்படி ஜனவரியில் 703 யூனிட்கள் டீலர்கள் அனுப்பப்பட்டன. அதில் 201 யூனிட்கள் ஜனவரியிலேயே வாடிக்கையாளர்களிடம் சென்றன. மேலும் பிப்ரவரி முதல் பாதியில் 169 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
35
இ- அக்சஸ் ஸ்கூட்டர் விலை
இந்த இ- அக்சஸ் (e-Access) மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.88 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிக விலையாக இருப்பது விற்பனை வேகத்தை பாதித்திருக்கலாம். இருந்தாலும், வாடிக்கையாளர்களை ஈர்க்க சுசுகி 7 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும், 3 ஆண்டுகளில் 60% பைய்பேக் கேரண்டியையும் வழங்குகிறது.
இந்த ஸ்கூட்டரில் 3kWh திறன் கொண்ட லித்தியம்-அயன் பாஸ்பேட் (LFP) பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய NMC பேட்டரிகளை விட நீண்ட ஆயுள் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. ஒரு முறை முழு சார்ஜில் 95 கிமீ வரை பயணிக்கலாம் என்று IDC தரவுகள் தெரிவிக்கின்றன. 4.1kW திறன் கொண்ட மின்மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
55
7 ஆண்டு வாரண்டி
மேலும், e-Access அதிகபட்சமாக 71 கிமீ வேகத்தை எட்டும். வழங்கப்படும் போர்டபிள் சார்ஜர் மூலம் 0 முதல் 80% வரை சார்ஜ் ஆக 4 மணி 30 நிமிடங்கள் பிடிக்கும். 100% சார்ஜுக்கு 6 மணி 42 நிமிடங்கள் தேவை. DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 80% வரை சார்ஜ் ஆக 1 மணி 12 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.