ஐரோப்பாவில் விற்கப்படும் டேசியா டஸ்டரை அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் இந்த மாடல் டியூன் செய்யப்பட்டுள்ளது. CMF-B பிளாட்ஃபார்மில் உருவான இந்த எஸ்யூவி, பாக்ஸி மற்றும் மஸ்குலர் தோற்றத்தை தக்க வைத்துள்ளது. புதிய கிரில், ஒய்-ஷேப் LED DRL-கள், புதிதாக ஹெட்லெம்ப்கள், பிக்சல் ஸ்டைல் ஃபாக் லேம்ப்கள் மற்றும் ஸ்போர்ட்டி பம்பர் ஆகியவை முன்பக்கத்தை பிரம்மாண்டமாக பெற்றுள்ளன. காட்டுகின்றன.
டஸ்டர் அம்சங்கள்
பக்கவாட்டில் தெளிவான கிரீஸ்கள், பெரிய கருப்பு கில்லாடிங், அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை ஆஃப்-ரோட் SUV உணர்வை தருகின்றன. பின்புறத்தில் இணைக்கப்பட்ட LED டெயில்லேம்ப்கள், சில்வர் டச் கொண்ட பம்பர், ரூஃப்-மவுண்டட் ஸ்பாய்லர், ரியர் வைப்பர் போன்றவை சேர்ந்து ஒரு பிரீமியம் தோற்றத்தை உருவாக்குகின்றன.