சொகுசு கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வரி குறைப்பு அப்டேட்!

Published : Jan 26, 2026, 12:29 PM IST

இந்தியாவில் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் CBU கார்களுக்கான 110% வரியை 40% ஆக குறைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய ஆட்டோ துறையில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14

இந்தியாவில் முழுமையாக வெளிநாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் CBU (முற்றிலும் கட்டப்பட்ட யூனிட்) கார்களுக்கு தற்போது 110% வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் புதிய திட்டத்தின் படி, இந்த வரியை 40% வரை குறைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் இது மேலும் குறைந்து 10% வரை செல்லும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

24

இந்த வரி குறைப்பு எல்லா கார்களுக்கும் பொருந்தாது. வெளியான அறிக்கைகள் படி, ரூ.16.3 லட்சத்திற்கும் அதிகமான இறக்குமதி மதிப்பு கொண்ட குறிப்பிட்ட ஐரோப்பிய கார்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதனால் பலன் அடையப்போவது குறிப்பாக Volkswagen, Mercedes-Benz, BMW போன்ற பிரபல ஐரோப்பிய பிராண்டுகள்தான் என்று சொல்லப்படுகிறது.

34

இந்தியாவின் ஆட்டோ கொள்கை இதுவரை “இந்தியாவில் தயாரித்தால் மலிவாக கிடைக்கும்” என்ற அடிப்படையில் செயல்பட்டது. அதாவது உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்து, வெளிநாட்டு இறக்குமதி கார்களுக்கு அதிக வரி விதிப்பதே முக்கிய நோக்கம். ஆனால் தற்போது உலகளவில் நிலவும் புதிய வர்த்தக சூழல், சர்வதேச அழுத்தங்கள் மற்றும் சந்தை மாற்றங்களால் அரசு கொள்கையை மெல்ல மாற்றத் தயாராகிறது.

44

இறக்குமதி வரி குறைந்தால் சொகுசு மற்றும் பிரீமியம் கார்கள் விலை குறைய வாய்ப்பு அதிகம். இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் அதிகமாக முதலீடு செய்யலாம். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு போட்டி கூடும் என்பதால் இந்திய ஆட்டோ துறை புதிய கட்டத்துக்கு செல்லலாம். வாங்குபவர்களுக்கு தேர்வுகள் அதிகரிக்கும் என்றாலும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் விலை மற்றும் வசதிகள் மேலும் முன்னேற வேண்டிய நிலை உருவாகலாம். இந்த மாற்றங்கள் பேசப்படுவதற்குப் பின்னணியாக இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories