ஸ்டைலிஷ் லுக், 14 இன்ச் வீல்கள்: அதிநவீன வசதிகளுடன் அதிரடியாக களமிறங்கிய அப்பிரீலியா ஸ்கூட்டர்!

Published : Oct 05, 2026, 05:44 PM IST

அப்பிரீலியா நிறுவனம் தனது புதிய SXR GT 125 மற்றும் SXR GT 175 மேக்ஸி-ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

PREV
14
இந்தியாவில் அப்பிரீலியா ஸ்கூட்டர்கள் அறிமுகம்

அப்பிரீலியா (Aprilia) நிறுவனம் தனது பிரீமியம் மேக்ஸி-ஸ்கூட்டர் வரிசையை மேம்படுத்தப்பட்ட எஞ்சின்கள், பெரிய சக்கரங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் SXR GT பெயரில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மாடல்களின் பட்டியலில் SXR GT 125 hp-e விலை ரூ. 1.11 லட்சமாகவும், SXR GT 175 hp-e விலை ரூ. 1.31 லட்சமாகவும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முந்தைய SXR 125 மற்றும் SXR 160 ஸ்கூட்டர்களின் உற்பத்தி அமைதியாக நிறுத்தப்பட்டதை அடுத்து, இந்த புதிய SXR GT வரிசை அறிமுகமாகியுள்ளது.

இது முற்றிலும் புதிய வடிவமைப்பு இல்லாவிட்டாலும், SR 125 மற்றும் SR 175 மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய எஞ்சின் தொழில்நுட்பத்துடன் அபிரீலியா தனது SXR சூத்திரத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளது. முன்போலவே பெரிய முன்பக்க ஏப்ரான், அகலமான சீட் மற்றும் மேக்ஸி-ஸ்கூட்டர் தோற்றம் தொடர்ந்தாலும், இதில் சேர்க்கப்பட்டுள்ள 'GT' குறி முழுக் கவரேஜ் கொண்ட நீண்ட தூரப் பயண நோக்கத்தைக் குறிக்கிறது.

24
எஞ்சின் & மைலேஜ் விவரம்

SXR GT 125 - இந்த மாடல் 124.5சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 7,400 rpm-ல் 10.6 hp ஆற்றலையும், 6,200 rpm-ல் 10.4 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. SXR GT 175 - கூடுதல் திறன் கொண்ட இந்த மாடல் 174.7 சிசி, ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டார் கொண்டுள்ளது. இது 7,200 rpm-ல் 13.3 hp ஆற்றலையும், 6,000 rpm-ல் 14.1 Nm டார்க் திறனையும் வழங்குகிறது. 2 எஞ்சின்களும் BS6 OBD-II ஸ்டேஜ் B விதிமுறைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதுடன், E20 பெட்ரோல் பயன்பாட்டிற்கும் உகந்தவையாக உருவாக்கப்பட்டுள்ளன.

34
முக்கிய மேம்பாடுகள் & சிறப்பம்சங்கள்

2 வேரியண்ட்களிலும் 14 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க இயந்திர மேம்பாடாகும். சிறிய சக்கரங்கள் கொண்ட ஸ்கூட்டர்களை விட, இது கரடுமுரடான சாலைகளில் சிறந்த ஸ்திரத்தன்மையையும், அதிக வேகத்தில் செல்லும் போது கூடுதல் நம்பிக்கையையும் தரும். இதன் ஒட்டுமொத்த தளம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட SR மாடல்களுடன் பகிரப்பட்டுள்ளது. இருப்பினும், 2 மாடல்களுக்கும் இடையேயான உபகரணங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

44
கூடுதல் வசதிகள்

SXR GT 175 - புளூடூத் இணைப்புடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்ப்ளே பெறுகிறது. இதன் மூலம் கால் மற்றும் மியூசிக் கன்ட்ரோல்கள் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியைப் பெறலாம். மேலும், கூடுதல் ஹேண்டில்பார் கண்ட்ரோல்கள், சிங்கிள்-சேனல் ABS மற்றும் ஹீட் ஷீல்டுடன் கூடிய திருத்தப்பட்ட எக்சாஸ்ட் பைப் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

SXR GT 125 - எளிய பயன்பாட்டிற்காக இதில் 5 இன்ச் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ABS-க்கு பதிலாக கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டம் (CBS) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மாற்றங்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட எஞ்சின் காரணமாக இதன் தொடக்க விலை வாடிக்கையாளர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories