புகைப்படங்களை எடுக்க கேலக்சி A08-ன் பின்புறத்தில் இரண்டு கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 50MP முதன்மை கேமரா இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்ஃபி மற்றும் காணொலி அழைப்புகளுக்காக 8MP கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 6,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 25W வேகமான சார்ஜ் வசதியும் கிடைக்கிறது. போனின் தடிமன் 8mm ஆக உள்ளது. டிஸ்பிளேக்கு Corning Gorilla Glass 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தூசி மற்றும் லேசான நீர் தெறிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான IP64 மதிப்பீடு இதில் உள்ளது.
ரூ.18,499 விலையில் அறிமுகமாகியுள்ள கேலக்சி A08-l சாம்சங் முக்கிய மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பெரிய 6,000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் நீண்ட கால மென்பொருள் ஆகியவை இதில் முக்கியமானவை. குறிப்பாக ஆறு தலைமுறை இயக்க முறைமை அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்கள் என்ற அறிவிப்பு, இந்த விலையில் நீண்ட காலம் போனை பயன்படுத்த நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. இதனுடன் 90Hz டிஸ்பிளே, 25W வேகமான சார்ஜ், கூடுதல் சேமிப்பக வசதி மற்றும் தூசி, நீர் பாதுகாப்பு ஆகியவையும் சேர்கின்றன. எனவே, அதிக பேட்டரி திறன் மற்றும் நீண்ட கால மென்பொருள் ஆதரவை முன்னுரிமையாகக் கொண்ட பயனர்கள் கேலக்சி A08 முக்கியமாக குறிவைக்கப்படுகிறது என்றே கூறலாம்.