ரெட்ரோ ஸ்டைலில் ஹோண்டா CB350C: புல்லட்டுக்கு போட்டியா?

Published : Sep 30, 2025, 12:21 PM IST

ஹோண்டா நிறுவனம் தனது பிரீமியம் பைக் வரிசையில் CB350C ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ராயல் என்ஃபீல்ட் புல்லட் மற்றும் கிளாசிக் மாடல்களுக்கு நேரடிப் போட்டியாக வருகிறது.

PREV
14
ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிஷன்

இந்தியாவில் புதிய குரூசர் பைக் வர்த்தகத்திற்கு நுழைந்துள்ளது. ஆனால் இது முழுமையான புதிய மாடல் அல்ல. இது ஹோண்டா CB350C பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் ஆகும். சில முக்கிய மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) கடந்த சில நாட்களுக்கு முன் தனது பிரீமியம் மிட்-சைஸ் மோட்டார் சைக்கிள் வரிசையில் புதிய சேர்க்கையாக CB350C ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரெட்ரோ குரூசர் பைக் பெங்களூரில் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.2,01,900 ரூபாய்க்கு கிடைக்கும்.

24
50cc ஹோண்டா பைக்

அக்டோபர் 2025 முதல் இந்த பைக் அனைத்து BigWing டீலர்ஷிப்புகளிலும் கிடைக்கும். முன்பதிவுகள் தற்போது ஹோண்டா அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும், BigWing டீலர்ஷிப்புகளிலும் செய்ய முடியும். இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் CB350 என்ற பழைய H’ness பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பைக் எரிபொருள் டாங்கில் புதிய CB350C லோகோவுடன் ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ் இடப்பட்டுள்ளது.

34
ஹோண்டா CB350C குரூசர்

முன்னணி மற்றும் பின் ஃபெண்டர்கள், எரிபொருள் டாங்கில் புதிய ஸ்டிரைப் கிராபிக்ஸ் பைக்குக்கு கிளாசிக் ரெட்ரோ குரூசர் தோற்றத்தை தருகின்றன. பைக் குரூசர் பைக் வழக்கமான அப்பிரவ் ரைடிங் நிலையை வைத்திருக்கிறது. ஆனால் புதிய காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பைக் க்ரோம்-பூரிக்கப்பட்ட ரியர் கிராப் ரெயில் மற்றும் இரட்டை சீட் விருப்பங்களை (கருப்பு அல்லது பிரவுன்) வழங்குகிறது. வண்ணத் தேர்வுகளில் Rebel Red Metallic மற்றும் Matt Dune Brown ஆகியவை புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன, பைக்கின் பாரம்பரிய அழகை மேம்படுத்துகின்றன.

44
CB350C ஸ்பெஷல் எடிஷன்

இந்த ஸ்பெஷல் எடிஷன் கிளாசிக் வடிவமைப்பையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கிறது. டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், ஹோண்டா ஸ்மார்ட்போன் வோய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் (HSVCS) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நெவிகேஷன் மற்றும் அழைப்புகளுக்கு ஹெட்ஸெட் மூலம் உதவுகிறது. பைக் இரட்டை-சேனல் ABS, அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளச்ச் மற்றும் ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இது ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் போன்று Bullet மற்றும் Classic மாடல்களுக்கு நேரடியாக போட்டியிடுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories