50% வரை தள்ளுபடி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ஆசையா.? உடனே ஆர்டர் பண்ணுங்க

Published : Sep 26, 2025, 04:06 PM IST

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஜாய் இ-பைக் போன்ற பிராண்டுகள் தங்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு பெரும் தள்ளுபடிகளை வழங்குகின்றன.

PREV
14
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை

இப்போது நாட்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மிகச் சிறந்த பண்டிகை கால சலுகைகள் கிடைக்கின்றன. புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் இந்த பிரிவை பாதிக்கவில்லை. ஏனெனில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வரிச் சலுகைகள் மற்றும் அரசு மானியங்களைப் பெறுகிறார்கள். அதேசமயம், ஆர்டிஓ மற்றும் காப்பீட்டு செலவுகளும் குறைவாக உள்ளதால் வாகனங்கள் எளிதில் வாங்கக்கூடியவை. சில மாநிலங்களில் ஆர்டிஓ முற்றிலும் இலவசமாக உள்ளது.

24
ஜாய் இ-பைக் விலை குறைவு

ஜாய் இ-பைக் பிராண்ட் கீழ் உள்ள பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் வுல்ஃப் 31AH, ஜென் நெக்ஸ்ட் 31AH, நானோ பிளஸ், வுல்ஃப் பிளஸ், நானோ ஈக்கோ மற்றும் வுல்ஃப் ஈக்கோ உள்ளிட்ட மாடல்கள் அடங்கும். விலை தற்போது ரூ.13,000 வரை குறைந்துள்ளது. இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் உயர் தரமான எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாய்ப்பை வழங்குகின்றன.

34
ஓலா எலக்ட்ரிக் தள்ளுபடி

ஓலா எலக்ட்ரிக் தனது ‘முஹுரத் மஹோத்சவ்’ சலுகை பண்டிகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்குகிறது. உதாரணமாக, S1 X 2kWh ஸ்கூட்டர் ரூ.81,999 மதிப்பில் இருந்தது, ஆனால் தற்போது ரூ.49,999-க்கு வாங்கலாம். S1 ப்ரோ பிளஸ் 5.2kWh ஸ்கூட்டர் ரூ.1,69,999-க்கு கிடைக்கிறது. ரோட்ஸ்டர் X மற்றும் X+ மோட்டார் சைக்கிள்களுக்கும் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

44
இருசக்கர வாகன தள்ளுபடி

மேற்கூறிய எலக்ட்ரிக் வாகன் தள்ளுபடிகள் மாநிலம், நகரம், டீலர், கையிருப்பு, நிறம் மற்றும் மாடல் அடிப்படையில் மாறலாம். வாங்குவதற்கு முன், உங்கள் அருகிலுள்ள டீலரை அணுகி சரியான சலுகை மற்றும் விவரங்களை உறுதி செய்யவும்.

Read more Photos on
click me!

Recommended Stories