மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, ஹோண்டா சிட்டி காரின் விலை ரூ.58,000 வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.
மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, ஜப்பானிய வாகன பிராண்டான ஹோண்டா சிட்டியின் அனைத்து வேரியன்ட்களின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது. எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.58,000 வரை குறைந்துள்ளது. இதனால் பேஸ் முதல் டாப் மாடல்கள் வரை அனைத்தும் முன்பை விட மலிவாக கிடைக்கின்றன.
24
ஹோண்டா சிட்டி விலைப்பட்டியல்
மிட்-சைஸ் சேடன் வாங்குவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என சொல்லலாம். ஹோண்டா சிட்டியின் வேரியன்ட் வாரியான புதிய விலைகள் மற்றும் வித்தியாசங்கள் பின்வருமாறு, எஸ்வி எம்.டி ரூ.11.95 லட்சம் (முந்தைய ரூ.12.38 லட்சம்), வி எம்.டி ரூ.12.70 லட்சம் (முந்தைய ரூ.13.15 லட்சம்), வி.ஜி.எக்ஸ் எம்டி ரூ.13.73 லட்சம் (முந்தைய ரூ.14.22 லட்சம்), ஸ்போர்ட்ஸ் வி சிவிடி ரூ.14.38 லட்சம் (முந்தைய ரூ.14.89 லட்சம்) என குறைவு ரூ.43,000–ரூ.58,000 வரை உள்ளது.
34
ஹோண்டா சிட்டி அம்சங்கள்
ஹோண்டா சிட்டியின் பவர்டிரெய்னில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது 121 bhp சக்தி மற்றும் 145 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீட் சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரிலும் ஹைவேயிலும் சீரான மற்றும் சக்திவாய்ந்த ஓட்ட அனுபவத்தை வழங்குகிறது.
உட்புற அம்சங்களில் 8-இன்ச் டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், க்ரூஸ் கண்ட்ரோல், சன்ரூஃப் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ADAS தொழில்நுட்பம் போன்றவை உள்ளன. போட்டியாளர்களாக ஃபோக்ஸ்வேகன் விர்டாஸ், மாருதி சியாஸ், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகியவை உள்ளன. ஹோண்டா சிட்டி தற்போது மலிவு விலை, சக்திவாய்ந்த இன்ஜின் மற்றும் முழுமையான அம்சங்களுடன் வாகன வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.