அடிமட்ட ரேட்டில் கிடைக்கும் ராயல் என்பீல்டு பைக் இதுதான்.. விலை இவ்வளவு தானா!

Published : Jan 28, 2026, 08:59 AM IST

குறைந்த விலை, ராயல் லுக் மற்றும் நம்பகமான இன்ஜின் ஆகியவை இந்த பைக்கை இந்திய ரைடர்களின் விருப்பமான தேர்வாக மாற்றியுள்ளது. இதன் விலை மற்றும் கலர் ஆப்ஷன்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
குறைந்த விலை ராயல் என்பீல்டு பைக்

இந்திய இருசக்கர வாகன சந்தையில் “ராயல் என்பீல்டு” என்ற பெயர் என்றாலே விலை அதிகம், ராயல் லுக், பவர் என்ற இமேஜ்தான். ஆனால் அந்த இமேஜையே உடைத்துப் போட்டிருக்கிறது ராயல் என்பீல்டு ஹண்டர் 350. 350 சிசி செக்மெண்ட்டில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை இந்த மாடல் கைப்பற்றியுள்ளது. அதனால் இளம் ரைடர்கள் முதல் நகர்ப்புற பயணிகள் வரை அனைவரிடமும் இந்த பைக் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

25
ஹண்டர் 350 விற்பனை

அந்த வரவேற்பு விற்பனையிலும் தெளிவாக தெரிகிறது. கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் மட்டும் 20,654 ஹண்டர் 350 பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே பைக், 2024 டிசம்பர் மாதம் 13,744 யூனிட்கள் மட்டுமே விற்பனையானது. ஒரே வருடத்தில் 6,910 யூனிட்கள் கூடுதல் விற்பனை, அதாவது 50.28 சதவீத வளர்ச்சி என்பதே ராயல் என்பீல்டின் இந்த ஸ்ட்ராட்டஜி எவ்வளவு ஹிட்டானது என்பதற்கான சாட்சி.

35
ராயல் என்பீல்டு டிசம்பர் விற்பனை

இந்த அசத்தலான விற்பனை காரணமாக, 2025 டிசம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 பைக்குகள் பட்டியலில் ஹண்டர் 350, 10வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஹீரோ ஸ்பிலெண்டர், ஹோண்டா ஷைன், ஹீரோ HF டீலக்ஸ், TVS அப்பாச்சி, பஜாஜ் பல்சர், ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ஹோண்டா யுனிகார்ன், புல்லட் 350, TVS ரைடர் போன்ற பிரபல பைக்குகள் முன்னணி இடங்களில் உள்ளன.

45
ராயல் என்பீல்டு பைக் விலை

ஹண்டர் 350 பைக்கின் மிகப்பெரிய பலம் அதன் விலைதான். தற்போதைய நிலையில், சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையில் ஹண்டர் 350 ஆரம்ப வேரியண்ட் வெறும் ரூ.1,37,640 என்ற அடிமாட்டு விலையில் கிடைக்கிறது. மேலும், டாப் வேரியண்ட் கூட ரூ.1,66,883 என்ற அளவில்தான் உள்ளது. இந்த விலையில் கிடைக்கும் ராயல் என்பீல்டு பைக் என்றால், அது உண்மையிலேயே போட்டி நிறுவனங்களுக்கு தலைவலி தான்.

55
இந்தியாவில் அதிகம் விற்கும் பைக்குகள்

மேலும், ஃபேக்டரி பிளாக், ரீபெல் ப்ளூ, லண்டன் ரெட், டோக்கியோ பிளாக், கிராபைட் கிரே, டேப்பர் கிரே, ரியோ ஒயிட் போன்ற கலர் ஆப்ஷன்களும் இந்த பைக்கை இன்னும் ஸ்டைலிஷாக மாற்றுகின்றன. குறைந்த விலை ராயல் லுக், நம்பகமான நான்கு இன்ஜின் மற்றும் சிறந்த விற்பனை… இந்த காரணங்களே ஹண்டர் 350-ஐ இந்திய சந்தையின் ஹாட் ஃபேவரிட் பைக்காக மாற்றப்பட்டுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories