போடு..! ரூ.56,000 வரை பம்பர் தள்ளுபடி.. இந்த மாதம் காமெட் இவி வாங்க சிறந்த மாதம்

Published : Nov 18, 2025, 11:13 AM IST

எம்ஜி மோட்டார் தனது குறைந்த விலை எலக்ட்ரிக் காரான எம்ஜி காமெட் இவிக்கு நவம்பர் மாதத்தில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரொக்கத் தள்ளுபடி, லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை  போன்றவற்றை சேமிக்க முடியும்.

PREV
14
எம்ஜி காமெட் இவி சலுகை

நகர்ப்புறத்தில் குறைந்த செலவு, அதிக சிக்கனத்துடன் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் கார் தேடி வருபவர்களுக்கு இந்த நவம்பர் மாதம் ஒரு சிறந்த நேரமாக அமைகிறது. காரணம், எம்ஜி மோட்டார் தனது மிக குறைந்த விலையில் எலக்ட்ரிக் காரான MG Comet EV சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்குள் வாங்கினால் 56,000 வரை சேமிக்கலாம். அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் தினசரி பயண தேவைகளைப் பார்க்கும்போது, ​​இந்த சலுகை பலருக்கும் பெரிய நன்மை தரக்கூடியதாக இருக்கும்.

24
ரூ.56,000 வரை தள்ளுபடி

இந்த மாதத்தில் காமெட் இவி மீது வழங்கப்படும் மொத்த சலுகை, முதன்மையாக 28,000 ரொக்கத் தள்ளுபடி அடங்கும். இது நேரடியாக ஆன்-ரோடு விலை குறைகிறது என்பதால், வாங்குபவர்களுக்கு நல்ல சான்ஸ் ஆக உள்ளது. அதோடு, உங்கள் வீட்டில் ஏற்கனவே எம்ஜி கார் இருந்தால், கூடுதலாக 20,000 லாயல்டி போனஸ் கிடைக்கும். குறிப்பிட்ட நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு 8,000 கார்ப்பரேட் சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும், உங்கள் நகரத்தில் பழைய விலைப்பட்டியலில் உள்ள காமெட் இவி மாடல்கள் (7kW ACFC அல்லது 3kW AC) கையிருப்பில் இருந்தால், அந்த விலை + இம்மாத தள்ளுபடியையும் இணைத்து பெறும் வாய்ப்பு உள்ளது.

34
காமெட் இவி அம்சங்கள்

எம்ஜி காமெட் இவி 17.3 kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் 42 PS பவரையும் 110 Nm டார்க்கையும் வழங்குகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இதன் ரேஞ்ச் ஒரு முழு சார்ஜில் 230 கி.மீ வரை என நிறுவனம் தெரிவிக்கிறது. 7.4 kW சார்ஜர் மூலம் 0 முதல் 100% வரை சார்ஜ் செய்ய சுமார் 3.5 மணி நேரம் போதும். 3.3 kW சார்ஜர் மூலம் முழு சார்ஜ் ஆக ஏழு மணிநேரம் எடுக்கலாம். நகர்புற பயணங்களுக்காக இது ஒரு சிறந்த மின்சார வாகனமாக கருதப்படுகிறது.

44
எலக்ட்ரிக் கார் ஆஃபர்

இதில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் மாநிலம், நகரம், வேரியண்ட், நிறம் மற்றும் டீலரின் கையிருப்பைப் பொறுத்து மாறுபடலாம். சில இடங்களில் தள்ளுபடி அதிகமாகவோ, குறைவாகவோ இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கார் வாங்குவதற்கு முன், உங்கள் அருகிலுள்ள எம்ஜி டீலரிடம் பேசிப் உண்மையான தள்ளுபடி விவரங்களை உறுதி செய்யுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories