புதிய கார்களுக்கு ரூ.2.18 லட்சம் வரை தள்ளுபடி.. மாருதி கொடுத்த நவம்பர் சலுகை

Published : Nov 18, 2025, 09:01 AM IST

மாருதி சுசூகி நிறுவனம் நவம்பர் மாதத்திற்காக தனது கார்களுக்கு பெரிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் நுகர்வோர் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் நன்மைகள் என பல வகைகளில் கிடைக்கின்றன.

PREV
15
மாருதி கார் சலுகை

நவம்பர் மாதத்திற்காக கார் வாங்க நினைப்பவர்களுக்கு மாருதி சுசூகி தரப்பில் பெரிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய கார் வாங்கும் திட்டம் இருந்தும், சரியான தள்ளுபடியை காத்திருந்தால், இந்த மாதம் அதிகபட்சமாக ரூ.2.18 லட்சம் வரை சேமிக்க முடியும். நெக்ஸா மற்றும் அரினா ஷோரூம்களில் கிடைக்கும் பல பிரபல கார் மாடல்களுக்கு சலுகை, எக்சென்ஜ் போனஸ், ஸ்கிராப் போனஸ் என பல்வேறு வகைகளில் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.

25
நவம்பர் கார் தள்ளுபடி

மாருதி பலேனோ மீது MT, AMT, CNG என அனைத்து வகைகளிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. MT மற்றும் CNG மாடல்களை வாங்குபவர்களுக்கு சேர்த்து ரூ.38,000 வரை நன்மைகள் கிடைக்கின்றன. AMT மாடலுக்கு ரூ.43,000 வரை சலுகை வழங்கப்படுவதால், இந்த ஹாட்ச்பேக் தற்போது மிகுந்த கவனம் பெறுகிறது.

35
2.18 லட்சம் தள்ளுபடி

மாருதி கிராண்ட் விட்டாரா வாங்க நினைப்பவர்கள் கூடுதல் நன்மை பெறப்போகிறார்கள். சிக்மா மாடலுக்கு ரூ.1,21,500, டெல்டா மாடலுக்கு ரூ.1,23,000, Zeta/Zeta(O), AllGrip, Alpha(O) மாடல்களுக்கு ரூ.1,23,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.1,73,000 வரை சலுகை வழங்கப்படுவதால், ஹைப்ரிட் SUV தேடுபவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

45
ஜிம்னி சலுகை

மாருதி ஜிம்னி மீது Zeta மற்றும் Alpha மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன. Zeta மாடலுக்கு ரூ.8,000 நன்மை மட்டுமே வழங்கப்பட்டாலும், Alpha மாடலுக்கு ரூ.83,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், மாருதி இன்விக்டோ-வின் Zeta+ மற்றும் Alpha+ மாடல்களுக்கு முறையே ரூ.1,93,000 மற்றும் ரூ.2,18,000 வரை பெரிய அளவிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

55
நவம்பர் 30 வரை மட்டும்

XL6 SUV மாடலுக்கு மொத்தம் ரூ.43,000 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் நுகர்வோர் சலுகை ரூ.10,000, எக்சேன்ஜ் போனஸ் ரூ.20,000, கார்ப்பரேட் சலுகை ரூ.10,000, CRM நன்மை ரூ.3,000 என பல வகை சலுகைகள் அடங்கும். ரஷ்லன் வெளியிட்ட தகவலின்படி, இந்த சலுகைகள் நவம்பர் 30 வரை மட்டுமே அமலில் இருக்கும். கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories