அடிச்ச பத்து பேரும் டான் தான்.. விற்பனையில் டாப் கியரில் அடித்து தூக்கிய மாருதி.!

Published : Dec 15, 2025, 10:48 AM IST

மாருதியின் இந்த மாடல்கள் டாப்-10 பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன. இந்த நான்கு மாடல்களும் இணைந்து 52,644 யூனிட்களுக்கு மேல் விற்பனையாகி, எஸ்யூவி சந்தையில் மாருதியின் வலுவான பிடியை உறுதி செய்துள்ளன.

PREV
12
மாருதி சுஸுகி எஸ்யூவி விற்பனை

2025 நவம்பர் மாத எஸ்யூவி விற்பனை பட்டியலில் மாருதி சுசுகி ஒரு தனித்துவமான சாதனையை பதிவு செய்துள்ளது. எந்த ஒரு மாதலும் முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பிடிக்காதபோதிலும், நிறுவனத்தின் நான்கு எஸ்யூவிகள் டாப்-10 பட்டியலில் இடம் பெற்றுள்ளன. டாடா நெக்ஸான், டாடா பஞ்ச் போன்ற மாடல்கள் முதலிடங்களை பிடித்த நிலையில், மாருதியின் ஃப்ராங்க்ஸ் 15,058 யூனிட்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் சிறிய ஆனால் நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது.

சுசுகி பிரெஸ்ஸா

இந்த பட்டியலில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. 2025 நவம்பரில் 13,947 யூனிட்கள் விற்பனையான நிலையில், இது கடந்த ஆண்டை விட சுமார் 7 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும், அதிக அம்சங்கள் கொண்ட புதிய போட்டி எஸ்யூவிகள் சந்தையில் இருந்தபோதிலும், அதன் நம்பகமான இன்ஜின்கள், பரந்த இடவசதி மற்றும் வலுவான சர்வீஸ் நெட்வொர்க் காரணமாக பிரெஸ்ஸா வாடிக்கையாளர்களின் விருப்ப பட்டியலில் இடம்பிடித்து வருகிறது.

22
கிராண்ட் விட்டாரா விற்பனை

மாருதி சமீபத்தில் அறிமுகப்படுத்திய விக்டோரிஸ் எஸ்யூவிக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2025 நவம்பரில் மட்டும் 12,300 யூனிட்கள் விற்பனையாகி, இந்த மாடல் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. செப்டம்பர் நடுப்பகுதியில் அறிமுகமான இந்த எஸ்யூவி, குறுகிய காலத்திலேயே மொத்தமாக 30,000 யூனிட்கள் விற்பனையை தாண்டியுள்ளது. இதுவே விக்டோரிஸுக்கான சந்தை மிகவும் வலுவானது என்பதைக் காட்டுகிறது.

12 சதவீத வளர்ச்சி

மேலும், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா டாப்-10 பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. 2025 நவம்பரில் 11,339 யூனிட்கள் விற்பனையான நிலையில், இது கடந்த ஆண்டை விட 12 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக அதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு அதிக தேவை உள்ளது. மொத்தமாக, ஃப்ரான்க்ஸ், பிரெஸ்ஸா, விக்டோரிஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய நான்கு எஸ்யூவிகள் சேர்ந்து 52,644 யூனிட்கள் விற்பனையாகி, டாப்-10 பட்டியலில் அதிக மாடல்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகியை நிலைநிறுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories