JNCP வெளியிட்டுள்ள மோதல் சோதனை அறிக்கையின்படி, மோதல் பாதுகாப்பில் ஃப்ரோங்ஸ் 76% மற்றும் தடுப்புப் பாதுகாப்பில் 92% மதிப்பெண்கள் பெற்றுள்ளது. முழு-முன்பக்க மோதல், பக்கவாட்டு மோதல் (ஓட்டுநர் இருக்கை), பாதசாரிகளின் கால்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளது. கழுத்துப் பாதுகாப்பு, பயணிகள் இருக்கை பெல்ட் நினைவூட்டல் சோதனைகளில் ஐந்தில் நான்கு புள்ளிகளும், பாதசாரிகளின் தலைப் பாதுகாப்பிற்கு ஐந்தில் மூன்று புள்ளிகளும் கிடைத்துள்ளன.