Maruti : வெறும் 107 கார்கள்தான் வித்ததா? மாருதியின் மைக்ரோ-எஸ்யூவிக்கு என்ன ஆச்சு? 92% விற்பனை சரிவு!

Published : Sep 11, 2026, 08:03 PM IST

Maruti Car Sales Drop : மாருதி சுஸுகி மைக்ரோ-எஸ்யூவி காரின் விற்பனை ஆகஸ்ட் 2026-ல் 92% சரிஞ்சிருக்கு. வெறும் 107 யூனிட்கள்தான் விற்பனையாகியிருக்கு. மாருதியின் இந்த கார் ஏன் இப்படி ஒரு சரிவை சந்திச்சதுன்னு பார்க்கலாம்.

PREV
15
Maruti Car Sales Drop

இந்திய கார் மார்க்கெட்ல மாருதி சுஸுகி கார்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. ஆகஸ்ட் 2026-லும் வேகன்ஆர், ஃபிரான்க்ஸ், ஸ்விஃப்ட், எர்டிகா போன்ற மாடல்கள் விற்பனையில் பட்டையைக் கிளப்பின. ஆனா, கம்பெனியோட விலை குறைவான கார்களில் ஒன்றான எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போன மாசம் நிலைமை சரியில்லை.

ஒரு மாசத்துல வெறும் 107 யூனிட்தான்!

ஆகஸ்ட் 2026-ல் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ வெறும் 107 யூனிட்கள் மட்டும்தான் விற்பனையாகியிருக்கு. போன வருஷம் இதே மாசத்துல 1,333 யூனிட்கள் விற்றது. அதாவது, ஒரே வருஷத்துல விற்பனை சுமார் 92% சரிஞ்சிருக்கு. மாருதியின் மற்ற கார்கள் நல்லா விற்பனையாகுற நேரத்துல, எஸ்-பிரெஸ்ஸோவின் இந்த பெரிய சரிவு கவனத்தை ஈர்த்திருக்கு.

Maruti Suzuki Cars Price Hike: பண்டிகை காலத்தில் கார் வாங்குவோருக்கு ஷாக்; மாருதி கார்களின் விலை மீண்டும் அதிகரிப்பு.. எவ்வளவு?

25
மைக்ரோ-எஸ்யூவி லுக் தான் ஹைலைட்

இந்த காரோட முக்கிய ஈர்ப்பே அதோட மைக்ரோ-எஸ்யூவி ஸ்டைல் டிசைன்தான். போல்டான கிரில், உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், பாக்ஸி டிசைன்னு பார்க்குறதுக்கு ஒரு குட்டி எஸ்யூவி லுக் கொடுக்குது. காரோட உள்ளேயும் டிசைன் வித்தியாசமா இருக்கு. மினி கூப்பர் காரை ஞாபகப்படுத்துற மாதிரி வட்டமான சென்டர் கன்சோல், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் எல்லாம் கொடுத்திருக்காங்க. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் பண்ற 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இருக்கு.

Budget Cars: 26 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக்... டாப் பட்ஜெட் 7 சீட்டர் கார்கள் லிஸ்ட்!

35
பாதுகாப்பு வசதிகள் எப்படி?

பாதுகாப்பு விஷயத்துல, டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீட் அலெர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற அம்சங்கள் ஸ்டாண்டர்டாவே வருது. குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் எஸ்-பிரெஸ்ஸோவுக்கு அவ்வளவா நல்ல ரேட்டிங் கிடைக்கல. ஆனா, இப்போ வர்ற புதிய யூனிட்களில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற வசதிகளை சேர்த்திருக்காங்க. எடை குறைவான 'Heartect' பிளாட்ஃபார்மில் இந்த கார் தயாரிக்கப்படுறதால, நகரப் பயணங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கு.

Maruti : லாரியே இடிச்சாலும் அசராம நிற்கும்... 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று மாஸ் காட்டிய மாருதியின் புது SUV

45
25 கிலோமீட்டருக்கு மேல மைலேஜ்

எஸ்-பிரெஸ்ஸோவில் 1.0 லிட்டர் K10C பெட்ரோல் இன்ஜின் இருக்கு. இது 66 குதிரைத்திறனையும், 89 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் கொடுக்குது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கு. பெட்ரோல் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 24.12 முதல் 25.30 கிலோமீட்டர் வரைக்கும் மைலேஜ் கொடுக்குது. சி.என்.ஜி வேரியண்ட் ஒரு கிலோவுக்கு 32.73 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும்னு கம்பெனி சொல்றாங்க.

Maruti Cars: பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாராவுக்கு ₹2.15 லட்சம் வரை தள்ளுபடி! மாருதியின் மெகா ஆஃபர்!

55
விலை எவ்வளவு?

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.49 லட்சத்தில் தொடங்கி ரூ.5.25 லட்சம் வரைக்கும் போகுது. குறைஞ்ச விலை, நல்ல மைலேஜ், காம்பேக்ட் சைஸ்னு பல ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தும், விற்பனையில் இப்படி ஒரு பெரிய சரிவை சந்திச்சிருக்கிறது ஆட்டோமொபைல் உலகில் கவனத்தை ஈர்த்திருக்கு.

Read more Photos on
click me!

Recommended Stories