Best Scooters: இந்தியர்கள் போட்டிபோட்டு வாங்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Published : Sep 10, 2026, 11:10 AM IST

Top 5 Best Selling Scooters : இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா ஆக்டிவா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் சுசூகி அக்சஸ் 125 அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

PREV
16
Top 5 Best Selling Scooters

இந்தியாவில் ஸ்கூட்டர் என்பது வெறும் பயணத்துக்கு மட்டுமான வண்டி இல்லை, அது ஒவ்வொரு குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. ஆபிஸ் போறதுக்கு, குழந்தைகளை ஸ்கூல்ல விட, காய்கறி, மளிகை சாமான் வாங்கன்னு சிட்டி டிராஃபிக்கில் பைக்குகளை விட ஸ்கூட்டர் ஓட்டுவது பெண்களுக்கும், பெரியவர்களுக்கும் ரொம்பவே சுலபம். இதனால்தான், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகின்றன. நீங்களும் ஒருவேளை புதுசா ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய டாப் 5 ஸ்கூட்டர்களின் லிஸ்ட் இங்கே பார்க்கலாம்.

Best Selling Bike: வெறும் ரூ.77,777 தான்! ஜூலையில் 3.35 லட்சம் பேர் வாங்கிய நம்பர் 1 பைக் இதுதான்

26
ஹோண்டா ஆக்டிவா (Honda Activa)

இந்தியர்களின் ஃபேவரைட் ஸ்கூட்டர் என்று பெயர் எடுத்த 'ஹோண்டா ஆக்டிவா' விற்பனையில் முதல் இடத்தில் இருக்கிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, சுமார் 2,06,170 யூனிட்கள் விற்பனையாகி, ஆக்டிவா தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. ஒரு குடும்பத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் சுலபமாக ஓட்டக்கூடிய, நீண்ட காலம் உழைக்கும் ஸ்கூட்டர் இது.

36
டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter)

ஹோண்டா ஆக்டிவாவுக்கு நேரடிப் போட்டியாக இருக்கும் டிவிஎஸ் ஜூபிடர், இரண்டாவது இடத்தில் உள்ளது. கிடைத்த தகவல்களின்படி, சுமார் 1,48,595 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. வசதியான சீட், நல்ல லெக்-ஸ்பேஸ், பெரிய ஸ்டோரேஜ் மற்றும் சிறந்த மைலேஜ் காரணமாக நடுத்தரக் குடும்பங்கள் ஜூபிட்டரை அதிகம் விரும்புகின்றனர்.

46
சுசூகி அக்சஸ் 125 (Suzuki Access 125)

125cc இன்ஜின் திறன் கொண்ட ஸ்கூட்டர்களில் சுசூகி அக்சஸ் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. சமீபத்தில் 82,505 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட சுமார் 21% அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கிளாசிக் லுக்கோடு நல்ல பிக்கப் மற்றும் மைலேஜ் விரும்புபவர்களுக்கு அக்சஸ் 125 ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

56
டிவிஎஸ் ஐ-கியூப் (TVS iQube)

நீங்கள் பெட்ரோலுக்குப் பதிலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (EV) தேடுகிறீர்கள் என்றால், டிவிஎஸ் ஐ-கியூப் முன்னணியில் உள்ளது. ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனையில் 4வது இடத்தைப் பிடித்துள்ள இந்த ஸ்கூட்டர், சுமார் 59,386 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஆண்டு அடிப்படையில் இந்த ஸ்கூட்டர் 158% வளர்ச்சி கண்டு, EV மார்க்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளது.

66
பஜாஜ் சேட்டக் (Bajaj Chetak)

ஒரு காலத்தில் இந்தியர்களின் செல்லப் பிள்ளையாக இருந்த 'சேட்டக்', இப்போது எலக்ட்ரிக் வடிவில் வந்து மாஸ் காட்டுகிறது. இந்த ஸ்கூட்டர் சுமார் 47,184 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் வெறும் 11,584 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த சேட்டக், இந்த முறை பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மெட்டல் பாடி மற்றும் பிரீமியம் லுக்கிற்கு வாடிக்கையாளர்கள் ஃபிடா ஆகியுள்ளனர்.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் இப்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் (EV) அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. உங்கள் பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப, மேலே உள்ள டாப் 5 ஸ்கூட்டர்களில் ஒன்றை நீங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் தேர்வு செய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories