மாருதி சுசுகி, Y17 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய பிரீமியம் 7-சீட்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. கிராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட இந்த மாடல், XUV700 மற்றும் டாடா சஃபாரி போன்ற கார்களுக்குப் போட்டியாக பார்க்கிறது.
இந்திய கார் மார்க்கெட்டில் பிரீமியம் 7-சீட்டர் எஸ்யூவி செக்மென்ட்டை குறிவைத்து மாருதி சுசுகி ஒரு புதிய மாடலை கொண்டு வர தயாராகி வருகிறது. “Y17” என்ற கோட் பெயரில் உருவாகும் இந்த எஸ்யூவி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு அதிகம் என ஆட்டோ துறையில் பேசப்படுகிறது. இந்த கார் பலமுறை சோதனை ஓட்டத்தில் காணப்பட்டதால் எதிர்பார்ப்பு ஏற்கனவே உயர்ந்துவிட்டது. போட்டியைப் பார்க்கும்போது, இந்த புதிய 7-சீட்டர் எஸ்யூவி நேரடியாக மஹிந்திரா XUV700, Hyundai Alcazar, Tata Safari மற்றும் MG Hector Plus போன்ற பிரபல மாடல்களுடன் மோதும். இதைத் தவிர, வரவிருக்கும் 7-சீட்டர் Renault Duster மற்றும் Kia Sorento அடிப்படையிலான புதிய எஸ்யூவி-களும் போட்டியை அதிகரிக்கும். மாருதி இந்த மாடலை தனது கற்கோடா ஆலையில் திட்டமிட்டுள்ளது.
23
XUV700க்கு போட்டியாக புதிய மாருதி SUV
டிசைன் பக்கம் பார்த்தால், இந்த Y17 எஸ்யூவி பெரும்பாலும் Maruti Grand Vitara மாடலின் ஸ்டைலை பின்பற்றும். ஆனால் முன் மற்றும் பின் பம்பர்கள், லைட்டிங் சிக்னேச்சர் போன்றவற்றில் சில புதிய மாற்றங்கள் இருக்கும். ஸ்பை படங்களின் அடிப்படையில், இந்த எஸ்யூவி-வின் பின்பக்கம் நீளமாக இருப்பது, மூன்றாவது வரிசை இருக்கைகளுக்காக வீல்பேஸ் நீட்டிக்கப்பட்டதாகக் காட்டுகிறது. உள்ளமைப்பில், பிரீமியம் ஃபீலுக்கு முக்கியத்துவம் தரப்படும். பெரிய டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், 360° கேமரா போன்ற வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நிலை 2 ADAS, வெண்டிலேட்டட் சீட்ஸ் போன்ற பாதுகாப்பு மற்றும் கம்ஃபர்ட் அம்சங்களும் வழங்கப்படலாம்.
33
ஹைப்ரிட் இன்ஜினுடன் புதிய 7 சீட்டர் SUV
இன்ஜின் ஆப்ஷன்களில், இந்த எஸ்யூவி-யில் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன், மேல் வேரியன்ட்களில் AWD வசதியும் வழங்கப்படலாம். மொத்தத்தில், குடும்ப பயணத்திற்கும், நீண்ட டிரைவ்களுக்கும் ஏற்ற ஒரு முழுமையான 7-சீட்டர் எஸ்யூவி ஆக இந்த மாடல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.