யமஹா ரேஇசட் ஆர் ஸ்கூட்டர், அதன் ஸ்போர்ட்டி லுக் மற்றும் சிறந்த செயல்திறனால் இளைஞர்களை கவர்ந்து, விற்பனையில் 61% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த 125cc ஸ்கூட்டர், சிறந்த மைலேஜ் மற்றும் ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம் போன்ற நவீன அம்சங்களுடன் வருகிறது.
இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனித்துவமான ஸ்டைலும் சிறந்த செயல்திறனும் பிரபலமான யமஹா ரேஇசட் ஆர் (Yamaha RayZR), மீண்டும் அதிக கவனம் பெறுகிறது. நகர போக்குவரத்திற்கு ஏற்ற லைட்டான ரைடிங் அனுபவமும், இளைஞர்களை கவரும் ஸ்போர்ட்டி லுக்-மும் இந்த ஸ்கூட்டரை வேறுபடுத்துகிறது. இதனால், இது ஒரு சாதாரண வாகனம் மட்டுமல்ல, ஒரு ஸ்டைல் ஸ்டேட்மெண்டாகவும் மாறியுள்ளது.
25
யமஹா ரேஇசட் ஆர்
பிப்ரவரி 2026 விற்பனை கணக்குகள் இந்த ஸ்கூட்டரின் பிரபலத்தைக் காட்டுகின்றன. அந்த மாதத்தில் மட்டும் 22,593 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 14,010 யூனிட்கள் மட்டுமே விற்ற நிலையில், இந்த ஆண்டு 61% அதிகமான வளர்ச்சி பதிவாகியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரித்திருப்பதற்கு, இந்த மாடல் மார்க்கெட்டில் வலுவாக நிலைநிறுத்தியிருப்பதற்கு சான்றாகும்.
35
அதிகரிக்கும் விற்பனை
ஜனவரி 2026-இல் 19,815 யூனிட்கள் விற்பனையான நிலையில், பிப்ரவரியில் மேலும் 14% உயர்வு. இது ஒருமுறை மட்டுமே அதிகமான தேவை இல்லை, மாதந்தோறும் தொடர்ந்து வளர்ந்து வரும் டிமாண்ட் என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய அப்டேட்டுகளுடன் புதிய கலர்கள் மற்றும் கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டதால், ஸ்கூட்டர் இன்று அனைவர்க்கும் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் வெற்றிக்கு அந்த டிசைன் மட்டும் காரணமல்ல. 125cc ஏயர்-கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்ஷன் என்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 8.2 PS பவர் மற்றும் 10.3 Nm டார்க் வழங்குகிறது. நகர போக்குவரத்தில் எளிதாக இயக்கக்கூடிய இந்த எஞ்சின், டிராஃபிக்கில் ஸ்மூத் அனுபவத்தை தருகிறது. மேலும், SMG (Smart Motor Generator) தொழில்நுட்பம் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.
55
ஸ்கூட்டர் விலை
இதில் உள்ள ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம், சிக்னலில் நிற்கும் போது எஞ்சினை தானாக ஆஃப் செய்து, மீண்டும் வேகப்படுத்தும் போது ஆன் ஆகும். இதனால் எரிபொருள் சேமிப்பு. மைலேஜ் விஷயத்தில், இந்த ஸ்கூட்டர் ARAI மதிப்பீட்டில் 71 kmpl வரை தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நடைமுறையில் 55-65 kmpl கிடைக்கும். ரூ.76,400 முதல் தொடங்கும் விலையில், இது இளைஞர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.