ரூ.5.65 மட்டுமே.. குறைந்த விலையில் 7 சீட்டர் கார்.. மக்கள் போட்டிபோட்டு வாங்குறாங்க

Published : Apr 02, 2026, 03:43 PM IST

ரூ.5.65 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமான நிசானின் புதிய 7 சீட்டர் 'கிராவிட்' கார், இந்திய சந்தையில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியால், நிசான் நிறுவனம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்நாட்டு விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளது.

PREV
15

ரூ.5.65 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமான புதிய 7 சீட்டர் கார், இந்திய மார்க்கெட்டில் பெரும் வரவேற்பைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்துள்ளது. ஜப்பான் நிறுவனமான நிசான் மோட்டார் இந்தியா, மார்ச் 2026-ல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அதிகபட்ச உள்நாட்டு விற்பனையைப் பதிவு செய்தது. இதற்குப் முக்கிய காரணம், சமீபத்தில் அறிமுகமான புதிய SUV/MPV மாடலான “Gravit” என்பதில் ஐயமில்லை.

25

மார்ச் மாதத்தில் மட்டும் நிசான் நிறுவனம் 4,408 யூனிட்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் இருந்து 2,230 யூனிட்களுடன் ஒப்பிடும்போது சுமார் 98% உயர்வாகும். மொத்த விற்பனை கணக்கில், 10,388 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 5,980 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் இரண்டிலும் நிறுவனம் நல்ல வளர்ச்சியைத் தொடர்ந்து வருகிறது.

35

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக நிசான் கிராவிட் மாடல் பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் அறிமுகமான இந்த 7-சீட்டர் கார், மார்ச் 1 முதல் டெலிவரி தொடங்கியது. சப்-4 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்ட இந்த குடும்ப கார், ரூ.5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைப்பதால், நாட்டிலேயே மிகவும் குறைந்த விலை 7-சீட்டர் கார்களில் ஒன்றாக உள்ளது. இதற்கு முன்பு இருந்த Magnite மாடலுடன் சேர்ந்து, Gravit விற்பனையை இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது.

45

முன்பு நிசான் நிறுவனம் அதிகமாக ஏற்றுமதியையே நம்பியிருந்தது. பிப்ரவரி மாதத்தில் 10,565 யூனிட்களில் 8,335 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் மார்ச் மாதத்தில் உள்நாட்டு விற்பனை அதிகரித்து, இரு சந்தைகளுக்கும் சமநிலை ஏற்பட ஆரம்பித்துள்ளது. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சௌரப் வத்ஸ், “வாடிக்கையாளர்களின் நேர்மையான வரவேற்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது” என்றார்.

55

இந்த வளர்ச்சியை தொடர்ந்து, நிசான் நிறுவனம் தனது “இந்திய மறுமலர்ச்சி திட்டம்” மூலம் மேலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 280-க்கும் மேற்பட்ட டச் பாய்ண்ட்கள் உள்ளன. மேலும் விரிவாக்கமும் நடைபெற உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories