Best Selling MPV: 16,111 கார்கள் விற்பனை.. இன்னோவா, கேரன்ஸை முந்திய கார் இதுவா?

Published : Jul 12, 2026, 10:10 PM IST

Best Selling MPV: 7 சீட்டர் கார் வாங்க நினைப்பவர்கள் அதிகம் தேர்வு செய்யும் மாடல்களில் மாருதி சுஸுகி எர்டிகா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஜூன் 2026 விற்பனை புள்ளிவிவரங்களும் அதையே உறுதிப்படுத்துகின்றன.

PREV
14
Best Selling MPV

இந்தியாவின் எம்பிவி (Multi-Purpose Vehicle) சந்தையில் மாருதி சுசுகி எர்டிகாவின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. குடும்ப பயன்பாட்டிற்கும், வணிக பயன்பாட்டிற்கும் ஏற்ற 7 சீட்டர் காராக பெயர் பெற்றுள்ள எர்டிகா, 2026 ஜூன் மாதத்திலும் அதிகம் விற்பனையான எம்பிவி என்ற இடத்தை தக்க வைத்துள்ளது. சமீபத்திய விற்பனை புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2026-ல் 16,111 மாருதி சுசுகி எர்டிகா கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 14,151 யூனிட்கள் ஆக இருந்தது. இதன் மூலம், ஆண்டு அடிப்படையில் 13.9 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், எம்பிவி செக்மென்ட்டின் மொத்த விற்பனையில் சுமார் 45% சந்தைப் பங்கை எர்டிகா மட்டுமே பெற்றிருப்பது அதன் வலுவான சந்தை நிலையை வெளிப்படுத்துகிறது.

24
மாருதி சுசுகி எர்டிகா

விற்பனை பட்டியலில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் இன்னோவா கிரிஸ்டா இணைந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. இந்த இரண்டு மாடல்களும் சேர்த்து 7,332 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 16.7 சதவீத சரிவு பதிவாகியுள்ளது. மூன்றாவது இடத்தில் கியா கேரன்ஸ் மற்றும் கியா கிளாவிஸ் மாடல்கள் உள்ளன. இவை சேர்த்து 4,847 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், ஆண்டு அடிப்படையில் 38.8 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க சரிவை இந்த மாடல்கள் சந்தித்துள்ளன.

34
மாருதி சுசுகியின் எம்பிவி

மாருதி சுசுகியின் மற்றொரு எம்பிவி மாடலான XL6, 2,711 யூனிட்கள் விற்பனையுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 34.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், டொயோட்டா Rumion 2,376 யூனிட்கள் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, 67.9 சதவீதம் என்ற மிகப்பெரிய ஆண்டு வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. பட்டியலில் தொடர்ந்து ரெனால்ட் ட்ரைபர் 1,871 யூனிட்களுடன் ஆறாவது இடத்திலும், மாருதி இன்விக்ட்டோ 349 யூனிட்களுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன. இன்விக்டோ-வின் விற்பனை ஆண்டு அடிப்படையில் 32.2 சதவீதம் உயர்ந்துள்ளது. பிரீமியம் எம்பிவி பிரிவில், டொயோட்டா Vellfire 140 யூனிட்கள் விற்பனையுடன் எட்டாவது இடத்திலும், கியா கார்னிவல் 30 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.

44
எர்டிகாவின் வெற்றிக்கு முக்கிய காரணம்

எர்டிகாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் எரிபொருள் சிக்கனம். இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. நிறுவனத்தின் தகவலின்படி, பெட்ரோல் மாடல் 20.3 முதல் 20.51 கிமீ/லிட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. CNG வேரியண்ட் 26.11 கிமீ/கிலோ வரை மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையைப் பொறுத்தவரை, மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் ரூ.8.80 லட்சம் முதல் ரூ.13.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது. போட்டித்திறன் வாய்ந்த விலை, சிறந்த மைலேஜ், பராமரிப்பு செலவு குறைவு மற்றும் விரிவான சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை, எம்பிவி வாங்கும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக எர்டிகாவை தொடர்ந்து வைத்திருக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories