மஹிந்திரா தனது புதிய எஸ்யூவி மஹிந்திரா XUV 7XO குறித்து மீண்டும் ஒரு டீசரை வெளியிட்டுள்ளது. ஜனவரி 5-ம் தேதி அறிமுகமாக உள்ள இந்த எஸ்யூவி, தற்போது விற்பனையில் உள்ளது மஹிந்திரா XUV700-ன் மேம்படுத்தப்பட்ட மற்றும் சக்திவாய்ந்த புதிய பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அம்சங்களை மஹிந்திரா வெளியிட்டு வருகிறார். வடிவமைப்பில், இதன் எலக்ட்ரிக் சகோதரி மஹிந்திரா XEV 9S-ஐ ஒத்த தோற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய XUV 7XO-வின் முக்கிய ஹைலைட் அம்சமாக 540-டிகிரி கேமரா அமைப்பு இடம் பெறுகிறது. வழக்கமான 360-டிகிரி கேமராவை விட இது ஒரு படி முன்னேறியது. வாகனத்தின் முன், பின் பக்கங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள், காரின் அடிப்பகுதியில் உள்ள பகுதிகளையும் டிரைவருக்கு தெளிவாக காட்டும் வசதி இதில் உள்ளது. இதனால் பள்ளங்கள், ஆஃப்-ரோடு பயணங்களில் கூட அதிக பாதுகாப்பு கிடைக்கும்.