இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் மாசு விதிகளுக்கு மத்தியில், சிஎன்ஜி கார்கள் சிறந்த தேர்வாக மாறியுள்ளன. மாருதி சுசுகியின் அதிக மைலேஜ் தரும் டாப் 5 சிஎன்ஜி மாடல்கள், அவற்றின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வும், மாசு கட்டுப்பாட்டு விதிகளும் அதிகரித்து வரும் நிலையில், கார் வாங்குபவர்களின் தேர்வுகள் மாற்றம் அடைந்து வருகின்றன. குறிப்பாக டெல்லி–என்சிஆர் போன்ற பகுதிகளில் GRAP நிலை IV அமலுக்கு வரும் போது, BS-6க்கு முந்தைய டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால், விதிமுறைகளுக்கு உட்பட்ட குறைந்த செலவில் ஓட்டக்கூடிய சிஎன்ஜி கார்கள் பொதுமக்களுக்கு ஒரு பாதுகாப்பான தேர்வாக மாறியுள்ளன. இந்த சூழலில், மாருதி சுசுகி நிறுவனம் தனது நம்பகமான சிஎன்ஜி மாடல்களுடன் முன்னணியில் உள்ளது.
26
மாருதி சுசுகி விக்டோரிஸ் சிஎன்ஜி
சிஎன்ஜி கார்களில் டிக்கி இடம் குறைவாக இருக்கும் என்ற பொதுவான எண்ணத்தை விக்டோரிஸ் மாற்றுகிறது. இதில் சிஎன்ஜி டேங்க் காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது, பூட் ஸ்பேஸில் எந்த சமரசமும் இல்லை. 1.5 லிட்டர் இன்ஜின் வழங்கும் மென்மையான ஓட்டமும், 27 கிமீ/கிலோ வரை மைலேஜும் இத்தனை குடும்பப் பயணங்களுக்கு ஏற்றதாக மாறுகிறது.
36
மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ் சிஎன்ஜி
ஸ்டைலான எஸ்யூவி தோற்றத்தையும், சிக்கனமான சிஎன்ஜி பயனையும் ஒரே காரில் விரும்புவோருக்கு ஃபிராங்க்ஸ் சிறந்த தேர்வு. 1.2 லிட்டர் இன்ஜினுடன் வரும் இந்த கார், பெட்ரோல் மாடலைப் போலவே பிரீமியமாகத் தெரிகிறது. நகரப் பயணங்களுக்கு இது ஸ்டைலும் சேமிப்பும் தரும் கார்.
இந்தியர்களின் நீண்டகால விருப்பமான ஸ்விஃப்ட், சிஎன்ஜி அவதாரத்தில் மேலும் சிக்கனமாகியுள்ளது. புதிய 1.2 லிட்டர் Z-சீரிஸ் இன்ஜின், சுமார் 32.8 கிமீ/கிலோ மைலேஜை வழங்குகிறது. தினசரி அலுவலகப் பயணத்திற்கு இது ஒரு புத்திசாலித்தனமான தேர்வு.
56
மாருதி சுசுகி பலேனோ சிஎன்ஜி
பிரீமியம் ஹேட்ச்பேக் அனுபவத்தை சிஎன்ஜி-யில் தரும் கார் பலேனோ. 6 ஏர்பேக்குகள், ESP, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இதில் ஸ்டாண்டர்டாக உள்ளன. நகரில் தினசரி பயணம் செய்பவர்களுக்கு வசதி மற்றும் பாதுகாப்பு இரண்டையும் இது வழங்குகிறது.
66
மாருதி சுசுகி டிசையர் சிஎன்ஜி
குறைந்த செலவில் அதிக மைலேஜ் தேடும் குடும்பங்களுக்கு டிசையர் எப்போதும் நம்பகமான பெயர். 1.2 லிட்டர் இன்ஜினுடன், மேனுவல் மற்றும் AMT விருப்பங்களில் இந்த கார், தினசரி பயன்பாட்டிற்கு கிடைக்கும் நடைமுறைசார் வசதிகளுடன் வருகிறது.