
நடுத்தர குடும்பத்தினரும் நிம்மதியான பயணத்திற்கு காரையை விரும்புகின்றனர். ரயிலோ, பேருந்தோ விரும்புவதில்லை. கார் என்றால் வேண்டி இடங்களில் நிறுத்தி இளைப்பாரிச் செல்ல ஏதுவாகவும், மனநிறைவான பயண அனுபவத்தையும் வழங்குகிறது.
அம்மா, அப்பா, குழந்தைகள் என திட்டமிட்டு வாழும் குடும்பத்திற்கான சிக்கனமான 5 சீட்டர் கார்கள் இதோ...
Maruti suzuki Alto K10
மாருதி சுஜூகி ஆல்டோ கே10 சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற Hatchback கார். ஆல்டோ K10 காரில் 998cc K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் உள்ளது, இது 67 பிஹெச்பி பவர் மற்றும் 89 என்எம் டார்க் உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் AMT (ஆட்டோமேட்டிக்) வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலின் மைலேஜ் சுமார் 24.39 கி.மீ/லிட்டர் கொடுக்கிறது. இந்த காரில் 5 பேர் வசதியாக உட்காரலாம். டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), ஈபிடி (எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன்) ஆகிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன. 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் வருகிறது. மாருதி சுசூகி ஆல்டோ K10 அதன் சிறிய அளவு, திறமையான செயல்திறன், மற்றும் இலகுரக கட்டுமானத்தால் சிறிய குடும்பங்களுக்கான பொருத்தமான தேர்வாக பார்க்கப்படுகிறது. இதன் சந்தை விலை 3.99 லட்சம் முதல் விற்பனையாகிறது.
Maruti Suzuki S-presso
மாருதி சுசூகி S-ப்ரெஸ்ஸோ, ஒரு மினி SUV கார். இது இந்திய சந்தையில் அதன் ஒப்பற்ற விலை மற்றும் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்புக்காக அறியப்படுகிறது. S-ப்ரெஸ்ஸோ 1.0 லிட்டர் K10B பெட்ரோல் என்ஜினை கொண்டுள்ளது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 21.4 கி.மீ வரை மைலேஜ கொடுக்கிறது. S-ப்ரெஸ்ஸோ காரில் டூயல் ஏர்பேக்கள், ஏபிஎஸ் உடன் ஈபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இது நகர்ப்புற பயணிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இதன் விலை 4.26 லட்சம் முதல் கிடைக்கிறது.
Renault Kwid
ரெனால்ட் க்விட் ஒரு பிரபலமான எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார். இது அதன் அற்புதமான டிசைன், மைலேஜ், மற்றும் பயனுள்ள அம்சங்களை கொண்டுள்ளது. இந்திய சந்தையில், ரெனால்ட் க்விட் நகர்ப்புற பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். க்விட் இரு பெட்ரோல் என்ஜின் விருப்பங்களுடன் வருகிறது. க்விட் 0.8 லிட்டர் மாடல் சுமார் 22.3 கி.மீ/லிட்டர் மைலேஜ் தரும், மற்றும் 1.0 லிட்டர் மாடல் சுமார் 21.7 கி.மீ/லிட்டர் மைலேஜ் தரும். 5 பேர் வசதியாக உட்காரலாம். டிரைவர் ஏர்பேக், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இதன் விலை 4.70 லட்சம்
Maruti Suzuki Eeco
மாருதி சுசூகி ஈகோ, ஒரு வசதியான மற்றும் பயனுள்ள MPV (மல்டி பர்பஸ் விகல்) வகை கார். இது குடும்ப பயணங்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்காக இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் எளிமையான வடிவமைப்பு மற்றும் பரவலான உட்புறத்தை கொண்டது. மாருதி ஈகோ மாடல் 5 சீடர் மற்றும் 7 சீடர் விருப்பங்களில் கிடைக்கிறது.
பெட்ரோல் மாடலின் மைலேஜ் சுமார் 16.11 கி.மீ/லிட்டர் மற்றும் CNG மாடல் சுமார் 20.88 கி.மீ/கிலோ வழங்குகிறது. மாருதி சுசூகி ஈகோ, குறைந்த செலவில் சிறந்த பயன்திறன் மற்றும் பரவலான உட்புற இடத்தை தேடுபவர்களுக்கு ஒரு சரியான தேர்வாகும். இதன் சந்தை விலை 5.32 லட்சம்
Maruti Suzuki Celerio
மாருதி சுசூகி செலரியோ ஒரு சிறிய Hatchback வகை கார். இது இந்திய சந்தையில் அதன் எரிபொருள் திறன், எளிய இயக்கம், மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்காக மிகவும் பிரபலமாக உள்ளது. நகர்ப்புற மற்றும் சிறிய குடும்ப பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. செலரியோ 1.0-லிட்டர் K10C டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 26.68 கி.மீ வழங்குகிறது. எரிபொருள் திறனை மதிக்கும் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. இது சந்தையில் 5.36 லட்சம் முதல் கிடைக்கிறது.
பேமிலி எல்லாம் ட்ராவல் பண்ணனுமா.. சிறந்த 7-சீட்டர் கார் இது.. எர்டிகா, இன்னோவா எல்லாம் ஓரம்போ!