முரட்டு என்ஜினுடன் மிரட்டும் ஹெவி பைக்ஸ்! யமஹா R15 க்கு டஃப் கொடுக்கும் கில்லி!

Published : Aug 28, 2024, 07:34 PM IST

சக்திவாய்ந்த என்ஜின் கொண்ட பைக்கை வாங்க விரும்புவோர் யமஹாவின் Yamaha R15 V4 பைக்கை வாங்குகிறார்கள். அவர்களுக்கு  யமஹா தவிர பல ஆப்ஷன்கள் உள்ளன. அதுவும் ரூ.2.5 லட்சத்திற்குள் இன்னும் அதிக சக்திவாய்ந்த பைக்குகள் பல உள்ளன.

PREV
16
முரட்டு என்ஜினுடன் மிரட்டும் ஹெவி பைக்ஸ்! யமஹா R15 க்கு டஃப் கொடுக்கும் கில்லி!
Yamaha R15 V4

Yamaha R15 பைக்கின் விலை ரூ. 1.87 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்). இது 155 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. பவர் ஃபுல் பைக்கை விரும்புவோருக்கு முதல் சாய்ஸாக உள்ளது.

26
Jawa 42

ஜாவா 42 பைக்கின் விலை ரூ. 1.98 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இந்த பைக் 294.72 சிசி எஞ்சினுடன் 26.94 பிஎச்பி ஆற்றலுடன் வலுவான செயல்திறனை வழங்குகிறது.

36
Honda CB350RS

ஹோண்டா CB350RS பைக்கின் விலை ரூ.2.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ஆரம்பிக்கிறது. 20 bhp ஆற்றலை வழங்கும் இந்த பைக் 348.36 சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 35.5 கி.மீ. மைலேஜை வழங்குகிறது.

46
Suzuki V-Strom SX

Suzuki V-Strom SX பைக்கின் விலை ரூ. 2.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ஆரம்பமாகிறது. 26.5 bhp ஆற்றலை உருவாக்கும் 249 சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது. இது 36 கி.மீ. மைலேஜை வழங்குகிறது.

56
OLA Roadster Pro 8

OLA ரோட்ஸ்டர் ப்ரோ ரூ 1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இது 579 கிமீ ரைடிங் ரேஞ்சை வழங்குகிறது. இந்த மோட்டார் சைக்கிள் 194 கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது.

66
Triumph Speed 400

ட்ரையம்ப் ஸ்பீட் 400 இந்திய சந்தையில் இந்த பிராண்டின் மிகவும் மலிவு விலை பைக் ஆகும். இதன் விலை ரூ. 2.24 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 39 பிஎச்பி ஆற்றலையும் 37 என்எம் டார்க்கையும் வழங்கும் இது 398 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சினைப் பெற்றுள்ளது.

click me!

Recommended Stories