கேடிஎம் பைக் வாங்குபவர்களுக்கு சூப்பர் நியூஸ்! 4 வருட வாரண்டி அறிவிப்பு

Published : Mar 12, 2026, 04:24 PM IST

கேடிஎம் நிறுவனம் 2025 மாடல் முதல் தனது அனைத்து ரோடு-லீகல் பைக்குகளுக்கும் நான்கு ஆண்டுகள் வாரண்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விரிவான வாரண்டி பைக்குடன் இணைக்கப்பட்டுள்ளது, உரிமையாளர் மாறினாலும் தொடரும்.

PREV
14
கேடிஎம் பைக் வாரண்டி

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம், தனது பைக் பயனர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 மாடல் ஆண்டிலிருந்து வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்படும் அனைத்து ரோடு-லீகல் பைக்குகளுக்கும் நான்கு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரீமியம் உற்பத்தியாளர் வாரண்டி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்ஜின் திறன் அல்லது செக்மென்ட் என்ற வேறுபாடு இல்லாமல் கேடிஎம்-ன் அனைத்து ஸ்ட்ரீட் பைக்குகளுக்கும் இந்த விரிவான வாரண்டி பொருந்தும் குறிப்பிடத்தக்கது.

24
கேடிஎம் புதிய அப்டேட்

நிறுவனத்தின் தகவலின்படி, 2025 மாடலாக அறிமுகமாகும் பைக்குகளுக்கு இந்த வாரண்டி நடைமுறைக்கு வரும். இதன் மூலம் அட்வென்சர், டூயல் ஸ்போர்ட், நேக்கட், சூப்பர்ஸ்போர்ட், ஸ்போர்ட்ஸ் டூரர், சூப்பர்மோட்டோ போன்ற பல்வேறு வகை ஸ்ட்ரீட் பைக்குகளுக்கும் நீண்ட கால பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் டிராக் ரேசிங் அல்லது போட்டிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் டர்ட் பைக்குகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

34
கேடிஎம் 4 வருட வாரண்டி

ஆஃப்-ரோடு அல்லது டிராக் பைக்குகள் அதிக அழுத்தத்தையும் தேய்மானத்தையும் சந்திப்பதால், அதை வாரண்டி திட்டத்திலிருந்து விலக்கி வைத்துள்ளதாக கேடிஎம் கூறினார். நகரப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் பைக்குகளுக்கு நீண்டகால ஆதரவு வழங்குவதே இந்த புதிய கொள்கையின் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த வாரண்டியின் சிறப்பம்சம் என்னவெனில், அது பைக் உரிமையாளருக்கு அல்ல; பைக்கிற்கே இணைக்கப்பட்டதாக இருக்கும். அதனால், வாரண்டி காலத்திற்குள் பைக் உரிமையாளர் மாறினாலும் அந்த பாதுகாப்பு தொடரும்.

44
கேடிஎம் வாரண்டி திட்டம்

இருப்பினும் முழு வாரண்டி நன்மைகளை பெற, பைக் உரிமையாளர்கள் நிறுவனத்தின் சேவை அட்டவணையை முறையாக பின்பற்ற வேண்டும். அனைத்து சர்வீஸ்களும் அங்கீகரிக்கப்பட்ட கேடிஎம் டீலர்களிடமே செய்யப்பட வேண்டும். இதோடு சில ஐரோப்பிய நாடுகளில் Service Activated Roadside Assistance (SARA) என்ற புதிய சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வ சேவையை செய்தால், ரோட்சைட் அசிஸ்டன்ஸ் தானாக புதுப்பிக்கப்படும். குறிப்பிடத்தக்கது என்னவெனில், இந்த நான்கு ஆண்டு வாரண்டி தற்போது வெளிநாட்டு சந்தைகளுக்கே பொருந்தும்; இந்தியாவில் கேடிஎம் ஏற்கனவே சில மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories