இந்தியாவில் நகரப் பயணங்களுக்கு ஏற்ற மலிவு விலை ஆட்டோமேட்டிக் கார்களின் தேவை அதிகரித்து வருகிறது. குறைந்த விலை, நல்ல மைலேஜ் மற்றும் நகரப் பயணத்திற்கு ஏற்ற வசதிகளுடன் கிடைக்கின்றன.
நகரப் போக்குவரத்து அதிகரித்துவரும் நிலையில், ஆட்டோமேட்டிக் கார்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. அடிக்கடி கிளட்ச் அழுத்தி கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததால், தினசரி நகரப் பயணங்களுக்கு இவை மிகவும் வசதியாக இருக்கும். குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் சுலபமாக ஓட்டக்கூடிய கார் தேடுபவர்களுக்கு தற்போது பல நல்ல ஆப்ஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பட்ஜெட்டில் கூட ஆட்டோமேட்டிக் கார்கள் வாங்குவது இப்போது சாத்தியமாகியுள்ளது.
26
குறைந்த விலையில் கிடைக்கும் கார்கள்
அந்த வகையில், குறைந்த விலையில் கிடைக்கும் மூன்று ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றி பார்ப்போம். ரூ.4.74 லட்சம் முதல் ரூ.6.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இந்த கார்கள், நகரப் பயணங்களுக்கு ஏற்றதாகவும் பராமரிப்பு செலவும் குறைவாகவும் இருக்கும்.
36
மாருதி சுசுகி
முதலில் மாருதி சுசுகி S-Presso VXi Opt AMT பற்றி பார்ப்போம். இந்த ஹாட்ச்பேக் கார் 998cc பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. இந்த என்ஜின் சுமார் 65 bhp சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. ஆட்டோமேட்டிக் AMT வேரியண்டின் ஆரம்ப விலை சுமார் ரூ.4,74,900 (எக்ஸ்-ஷோரூம்). எரிபொருள் மைலேஜ் விஷயத்தில் இது சிறப்பாக செயல்பட்டது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 25.3 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ரெனால்ட் க்விட் 1.0 AMT கார் வருகிறது. 999cc, 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வரும் இந்த கார் அதிகபட்சமாக 69 bhp சக்தியை வழங்குகிறது. இதன் குறைந்த விலை ஆட்டோமேட்டிக் வேரியண்டான Evolution AMT சுமார் ரூ.4,99,900 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 22.3 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என்ற தகவல்கள் கூறுகின்றன.
56
டாடா டியாகோ
மூன்றாவது கார் டாடா டியாகோ XTA AMT. 1.2 லிட்டர் (1199cc) பெட்ரோல் என்ஜினுடன் வரும் இந்த ஹாட்ச்பேக், சுமார் 86 bhp சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விலை ரூ.6,31,290 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். மைலேஜ் கணக்கில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 19 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
66
நல்ல மைலேஜ் கார்கள்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதற்கு மேலாக RTO கட்டணம், இன்சூரன்ஸ் மற்றும் பிற கட்டணங்கள் சேர்க்கப்படும். அதனால் மாநிலத்துக்கு மாநிலம் இறுதி விலையில் மாற்றம் இருக்கலாம்.