Skoda Offers: ஸ்கோடா கார்களுக்கு மெகா தள்ளுபடி: லட்சக்கணக்கில் சேமிக்க சூப்பர் சான்ஸ்!

Published : Mar 11, 2026, 03:56 PM IST

ஸ்கோடா நிறுவனம், மார்ச் மாதத்தில் தங்களோட குஷாக், ஸ்லாவியா, கோடியாக் கார்களுக்கு பம்பர் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அது என்னென்ன ஆஃபர் என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Skoda Cars Discount

மார்ச் மாசம் வந்துட்டாலே, கார் கம்பெனிகள் தள்ளுபடி மழையை பொழிய ஆரம்பிச்சுடும். அந்த வரிசையில, ஸ்கோடா ஆட்டோ இந்தியாவும் இப்போ செடான், எஸ்யூவி கார்களுக்கு செம ஆஃபர் கொடுத்திருக்காங்க. கேஷ் டிஸ்கவுன்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் ஸ்கீம், லாயல்டி இன்சென்டிவ்னு பல வழிகள்ல பணத்தை மிச்சப்படுத்த ஒரு வாய்ப்பை கொடுக்குறாங்க. புது நிதி ஆண்டு தொடங்குறதுக்கு முன்னாடி, டீலர்கள் கையில இருக்குற பழைய ஸ்டாக்கை கிளியர் பண்ணனும்னு நினைப்பாங்க. அதனால, போன வருஷ ஸ்டாக் கார்களுக்குதான் இப்போ பெஸ்ட் டீல்ஸ் கிடைக்குது. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு தள்ளுபடினு பார்க்கலாம் வாங்க.

25
ஸ்கோடா குஷாக்

ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி கிராண்ட் விட்டாராவுக்கு போட்டியா இருக்குற இந்த ஸ்கோடா குஷாக் காருக்கு, நடப்பு ஆண்டின் (2026) வேரியன்ட்களில் ரூ.1.40 லட்சம் வரை தள்ளுபடி தராங்க. இதுல கேஷ் டிஸ்கவுன்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகைகள் எல்லாம் அடங்கும். இது மட்டுமில்லாம, 2025, 2024-ம் ஆண்டு ஸ்டாக்குகளையும் கிளியர் பண்றாங்க. மான்டே கார்லோ, பிரெஸ்டீஜ், ஸ்போர்ட்லைன், சிக்னேச்சர் போன்ற வேரியன்ட்களுக்கு ரூ.3 லட்சம் வரைக்கும் கூட சலுகைகள் கிடைக்குது.

35
ஸ்கோடா ஸ்லாவியா

ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் கார்களுக்கு போட்டியான இந்த ஸ்லாவியாவுக்கு, 2026 மாடல்கள்ல வேரியன்ட், டிரான்ஸ்மிஷனைப் பொறுத்து சுமார் ரூ.60,000-ல இருந்து ரூ.65,000 வரை சலுகைகள் இருக்கு. பழைய ஸ்டாக் வாங்குனா இன்னும் அதிகமா சேமிக்கலாம். பழைய மாடல்கள்ல உங்களுக்கு ரூ.3 லட்சம் வரைக்கும் கூட தள்ளுபடி கிடைக்க வாய்ப்பிருக்கு.

45
ஸ்கோடா கோடியாக்

இந்த பிரீமியம் செக்மென்ட் காருக்குதான் அதிகமான தள்ளுபடி கொடுத்திருக்காங்க. ஸ்போர்ட்லைன் வேரியன்டுக்கு ரூ.5 லட்சம் வரையும், L&K செலக்‌ஷன் வேரியன்டுக்கு ரூ.2.5 லட்சம் வரையும் சலுகைகள் இருக்கு. என்ட்ரி லெவல் லாஞ்ச் வேரியன்ட்ல சுமார் ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கலாம்.

55
ஸ்கோடா கைலாக்கிலும் லாபம்

டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா போன்ற கார்களுக்கு போட்டியா இருக்குற இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவிதான் கைலாக். இதோட மிட்-ஸ்பெக் சிக்னேச்சர், சிக்னேச்சர்+ வேரியன்ட்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைக்குது. ஆட்டோமேட்டிக் வெர்ஷனுக்கு கொஞ்சம் குறைவான தள்ளுபடி இருக்கு. ஒரு முக்கியமான விஷயம், இங்க சொல்லப்பட்டிருக்குற தள்ளுபடிகள் எல்லாம் பொதுவான தகவல்கள்தான். இந்த ஆஃபர்கள் ஒவ்வொரு மாநிலம், நகரம், டீலர்ஷிப், கையிருப்பு, காரோட நிறம், வேரியன்ட்னு எல்லாத்தையும் பொறுத்து மாறும்.

Read more Photos on
click me!

Recommended Stories