கியா செல்டோஸ் காருக்கு அதிரடி தள்ளுபடி.. விலை குறைப்பு.. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க!

Published : Apr 20, 2026, 07:03 PM IST

Kia Seltos Offers: இந்திய வாடிக்கையாளர்களின் செல்வாக்கை பெற்ற கியா செல்டோஸ் மீது அந்த நிறுவனம் ரூ.1.35 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
கியா செல்டோஸ் கார்களுக்கு தள்ளுபடி

கியா செல்டோஸ் கார் மீது அந்த நிறுவனம் ரூ.1.35 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற இந்த எஸ்யூவி, ADAS, பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்கள் மற்றும் மூன்று சக்திவாய்ந்த இன்ஜின் விருப்பங்களைக் கொண்டுள்ளது.

கியா செல்டோஸ் அம்சங்களை பொறுத்தவரை 'டைகர் நோஸ்' கிரில், நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்களுடன் சாலையில் அனைவரையும் கவரும் ஒரு பிரீமியம் தோற்றத்தை  வழங்குகிறது.

24
பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல்-ஸ்கிரீன் அமைப்பு

செல்டோஸின் உள்ளே பனோரமிக் சன்ரூஃப், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான டூயல்-ஸ்கிரீன், போஸ் ஸ்பீக்கர்கள் என பல பிரீமியம் அம்சங்கள் உள்ளன. இந்தியா NCAP சோதனையில் 5-நட்சத்திர மதிப்பீடு பெற்ற செல்டோஸ், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற 17-க்கும் மேற்பட்ட ADAS அம்சங்களைக் கொண்டுள்ளது.

34
மூன்று சக்திவாய்ந்த இன்ஜின்

இந்த மாடல் கார் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. இந்த காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் தரநிலையாக வழங்கப்படுவது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த நிலையில் தான் கியா நிறுவனம் செல்டோஸ் மீது ரூ.1.35 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. இதில் ரொக்கத் தள்ளுபடி மற்றும் பிற சலுகைகளும் அடங்கும். 

44
கியா செல்டோஸ் விலை

கியா செல்டோஸ் மாடலின் விலையை பொறுத்தவரை இதன் ஆரம்ப விலை ரூ.10.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த விலை அதன் வேரியண்ட்டுகள் மற்றும் இன்ஜின் தேர்வுகளைப் பொறுத்து மாறுபடும்.

முக்கிய அறிவிப்பு: கியா செல்டோஸ் கார் மீதான தள்ளுபடி மாநிலங்களை பொறுத்து, ஷோரூம்களை பொறுத்து மாறுபடலாம். ஆகவே உங்கள் அருகில் உள்ள டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories