ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனமான கவாசாகி, நிஞ்சா ZX-4R பைக்கில் ரூ.40,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இது பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையில் நேரடியாகப் பொருந்தும். இந்த சலுகை 2025 மே மாத இறுதி வரை அல்லது இருப்பு தீரும் வரை செல்லுபடியாகும். கவாசாகி ZX-4R, நிறுவனத்தின் ZX-6R பைக்கிற்கு அடுத்தபடியாகவும், இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை இன்லைன்-ஃபோர் பைக்காகவும் உள்ளது. இந்த பைக்கில் 399 சிசி, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் உள்ளது, இது 14,500 rpm-ல் 75.9 bhp பவரையும் 13,000 rpm-ல் 39 Nm டார்க்கையும் உருவாக்குகிறது.