கவாஸாகி பைக்குகளுக்கு அதிரடி தள்ளுபடி.. நிஞ்சா 1100SX-க்கு ரூ.55,000 வரை சூப்பர் சலுகை!

Published : Nov 18, 2025, 03:07 PM IST

கவாஸாகி இந்தியா தனது MY24 மற்றும் MY25 மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வவுச்சர்களை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் நவம்பர் 30, 2025 வரை செல்லுபடியாகும். இதன் விரிவாக பார்க்கலாம்.

PREV
12
கவாஸாகி பைக் தள்ளுபடி

ஜப்பானின் பிரபல இருசக்கர தயாரிப்பாளரான கவாஸாகி இந்தியா, தனது MY24 மற்றும் MY25 மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வவுச்சர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சலுகைகள் கேஷ்பேக் வகையில் வழங்கப்படுகின்றன மற்றும் நேரடியாக எக்ஸ்-ஷோரூம் விலைக்கு குறைப்பு அளிக்கப்படும். நவம்பர் 30, 2025 வரை செல்லுபடியாகும் இந்த சலுகைகள் நிஞ்சா 500, நிஞ்சா 1100SX, நிஞ்சா 300, மற்றும் MY25 வெர்சிஸ்-எக்ஸ் 300 மாடல்களுக்கு பொருந்தும். ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர் பைக்குகளை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்த சலுகைகளில் மிகவும் லாபம் தரும் மாடல் நிஞ்சா 1100SX. இந்த மாதலுக்கு நிறுவனம் ரூ.55,000 தள்ளுபடி வழங்குகிறது. 1,099cc இன்லைன்-4 இன்ஜின், டிராக்ஷன் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், ரைடிங் மோடுகள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களால் இது நீண்டது தூர பயணங்களுக்கும், அதிக சக்தி விரும்புபவர்களுக்கும் மிகவும் ஏற்றதாகும்.

22
பைக் கேஷ்பேக் வவுச்சர்

மேலும், சாகசப் பயணம் விரும்புபவர்களுக்காக Versys-X 300 (MY25) மாடலுக்கு ரூ.25,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 296cc ட்வின் சிலிண்டர் இன்ஜின், நீண்ட சஸ்பென்ஷன், 19-இன்ச் முன்சக்கரம், 17-லிட்டர் டேங்க் என, டூரிங் பயணங்களுக்கு இது ஒரு வலுவான தேர்வாக அமைகிறது. புதியவர்கள் முதல் அனுபவமிக்க ரைடர்கள் வரை அனைவருக்கும் இந்த பைக் பொருத்தமானது.

ஸ்போர்ட்ஸ் பிரிவில் புதிய வரவான Ninja 500 மாடலுக்கும் ரூ.20,000 வரை நன்மை உள்ளது. 451cc பேரலால்-டிவின் என்ஜின் மூலம் 45 bhp சக்தி வழங்கும் இந்த பைக் நகரப் பயணத்திலும், நெடுஞ்சாலையிலும் நல்ல கட்டுப்பாடு மற்றும் மென்மையான ரைடிங் வழங்குகிறது. மேலும், இளம் ரைடர்களிடையே பிரபலமான Ninja 300 மாடலுக்கு ரூ.5,000 வவுச்சர் கிடைக்கிறது. 296cc ட்வின் சிலிண்டர் இன்ஜின் மற்றும் மலிவு பராமரிப்பு செலவு காரணமாக இந்த மாடல் தொடர்ந்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories