ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டு ஏற்றுமதி 24,384 யூனிட்களுக்கு மேல், 27% வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் அறிமுகமான 5-டோர் ஜிம்னி மாடல் 2023 அக்டோபரில் வெளியிடப்பட்டது. மூன்று மாதங்களில் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஜப்பானில் இது Nomade என அறிமுகமானது, அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய GST நடைமுறைபடியே, மாருதி ஜிம்னி விலை மாற்றப்பட்டது. ஆரம்ப விலை ரூ.12.32 லட்சம், மற்றும் மேல் மாடல் ரூ.14.45 லட்சம் ஆகும். இந்த SUV வலிமையான பெட்ரோல் என்ஜின், நவீன வசதிகள் மற்றும் 4X4 சிஸ்டம் கொண்டுள்ளது.