Electric Scooters : ரூ.28 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. அட்டகாசமான அம்சங்கள் - முழு விபரம் இதோ !!

First Published | Jul 30, 2023, 11:00 AM IST

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

விலை குறைவான அதாவது மலிவு மின்சார ஸ்கூட்டர்களில் Avon E Lite, Ujaas eZy மற்றும் Bounce Infinity E1 ஆகியவை அடங்கும். விலை போன்றவற்றிலிருந்து அவற்றின் பிற அம்சங்கள் பற்றி இங்கு நாம் காணலாம்.உங்களுக்காக ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டு, குறைந்த பட்ஜெட்டில் சிறந்த தேர்வை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவும் வகையில் சிறந்த பட்டியலை நாங்கள் தயாரித்துள்ளோம்.

இன்று உங்களுக்கு இந்திய சந்தையில் கிடைக்கும் 3 மலிவான மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி சொல்கிறோம். இவற்றை இயக்குவதன் மூலம் அதிகப் பணத்தை மிச்சப்படுத்தலாம். பட்டியலில் Avon E Lite, Ujaas eZy மற்றும் Bounce Infinity E1 ஆகியவை அடங்கும். Avon E Lite, Ujaas eZy மற்றும் Bounce Infinity E1 பற்றி பவர் மற்றும் விவரக்குறிப்புகள் முதல் விலை வரை விரிவாக அறிந்து கொள்வோம்.

Tap to resize

அவான் இ லைட் (Avon E Lite) ஆரம்ப விலை ரூ.28,000 ஆகும். Avon E Lite இல் 232 W BLDC மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிமீ வரை இயக்க முடியும். வெறும் 4-8 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறத்தில் டிரம் பிரேக்கும். பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

உஜாஸ் (Ujaas) eZy இன் ஆரம்ப விலை ரூ.31,880 ஆகும். Ujaas eZy இல் 250 W மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிமீ வரை இயக்க முடியும். பேட்டரி திறன் 48 V/ 26 Ah ஆகும். வெறும் 6-7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். இதில் பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டிரம் பிரேக்குகளும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் உள்ளன.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1-யில் 1500 W BLDC மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை இயக்க முடியும். பேட்டரி திறன் 48 V/39 Ah. சார்ஜ் செய்யும் நேரத்தைப் பற்றி பேசினால், வெறும் 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மின்சார ஸ்கூட்டர் மணிக்கு 65 கிமீ வேகத்தில் இயங்கும். Bounce Infinity E1 இன் ஆரம்ப விலை ரூ.45,099 ஆகும்.

Electric Scooters : ரூ.49 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 3 வருட வாரண்டி - முழு விபரம் இதோ !!

Latest Videos

click me!