பெட்ரோலா? டீசலா? எந்த கார் எடுத்தாலும் ஆஃபர்.. ஹூண்டாயின் நவம்பர் மாத அதிரடி சலுகைகள்.. முழு விபரம்

Published : Nov 20, 2025, 04:53 PM IST

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவிக்கு நவம்பர் மாதத்தில் ரூ.60,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதத்தை விட அதிகம். இந்த மாடல் பல இன்ஜின் விருப்பங்கள், சிறந்த மைலேஜ் மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

PREV
14
ஹூண்டாய் வென்யூ தள்ளுபடி

ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது வென்யூ எஸ்யூவிக்கான பிரபலமான நவம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தமாக ரூ.60,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. கடந்த அக்டோபரில் ரூ.50,000 வரை மட்டுமே சலுகை இருந்ததால், தற்போது வாங்குபவர்கள் கூடுதல் பலனைப் பெறுகின்றனர். வென்யூவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7,26,381 முதல் தொடங்குகிறது. வேரியண்ட் மற்றும் சலுகைகளின் அடிப்படையில், வாடிக்கையாளர் அதிகபட்சம் ரூ.1,32,750 வரை பலன் பெறலாம். இந்திய சந்தையில் இந்த மாடல், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் போன்ற மாடல்களுடன் கடுமையான போட்டியில் உள்ளது.

24
வென்யூ நவம்பர் சலுகை

வென்யூ பல இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் கிடைக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் 17.52 கிமீ/லிட்டர், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் iMT 18.07 கிமீ/லிட்டர், 1.0 லிட்டர் டர்போ DCT ஆட்டோமேட்டிக் 18.31 கிமீ/லிட்டர், மற்றும் 1.5 லிட்டர் டீசல் மேனுவல் 23.4 கிமீ/லிட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதில் ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி டிஆர்எல், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லெம்ப்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிலே ஆதரவுடன் கூடிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் போன்ற நவீன அம்சங்களும் உள்ளன.

34
ஹூண்டாய் கார் ஆஃபர்

பாதுகாப்பு அம்சங்களிலும் வென்யூ சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆறு ஏர்பேக்குகள், TPMS ஹைலைன், ஆட்டோ ஹெட்லெம்ப்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் (HAC), பின்புற கேமரா ஆகியவை எல்லா பயணிகளுக்கும் பாதுகாப்பை அதிகரிக்கின்றன. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் கலர் TFT MID டிஸ்ப்ளே மூலம் ஓட்டுநருக்கு தேவையான தகவல்கள் தெளிவாகவும் எளிய வகையிலும் வழங்கப்படுகின்றன.

44
வென்யூ விலை குறைப்பு

மேற்கண்ட தள்ளுபடிகள் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருக்காது என்பது முக்கியம். நகரம், மாநிலம், டீலர்ஷிப், வேரியண்ட், கையிருப்பு, நிறம் போன்ற காரணிகளின் அடிப்படையில் தள்ளுபடி மாறுபடும். எனவே, கார் வாங்க முன் உங்கள் அருகிலுள்ள ஹூண்டாய் டீலரை தொடர்பு கொண்டு துல்லியமான சலுகைகளை உறுதி செய்துகொள்வது சிறந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories